'ஆதிபுருஷ்' படத்தால் நேபாளத்தில் வெடித்த சர்ச்சை! காத்மாண்டு-போகாராவில் ஹிந்தி படங்களுக்கு தடை! என்ன காரணம்?

By manimegalai aFirst Published Jun 19, 2023, 5:28 PM IST
Highlights

'ஆதிபுருஷ்' படத்தில் இடம்பெற்ற வசனத்தால் வெடித்த பிரச்சனை காரணமாக நேபாளம் உள்ளிட்ட சில இடங்களில் இப்படம் தடை செய்யப்பட்டுள்ளது.  

இயக்குனர் ஓம் ராவத் இயக்கத்தில், பிரபாஸ் ராமராகவும், கீர்த்தி சனோன் ஜானகியாகவும் நடித்து... ஜூன் 16 ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியான திரைப்படம் 'ஆதிபுருஷ்'. இப்படம் இராமாயண கதையை மையமாக வைத்து, 3டி தொழில்நுட்பத்தில் சுமார் 600 கோடி பட்ஜெட்டில் உருவானது. முதல் நாளிலேயே இப்படம் உலக முழுவதும் 100 கோடிக்கும் மேல் வசூல் செய்தாலும், தொடர்ந்து முன்வைக்கப்படும் கலவையான விமர்சனங்களால், வசூல் குறைந்து கொண்டே செல்கிறது. இந்த நிலை ஏற்பட்டால், போட்ட பணமாவது கிடைக்குமா என கலக்கத்தில் உள்ளது தயாரிப்பு நிறுவனம்.

அதே போல், நெகட்டிவ் விமர்சனங்கள் கொடுத்தவர்களை தொடர்பு கொண்டு, ஆதிபுருஷ் படக்குழு பேரம் பேசியதாக வெளியான தகவலால் பரபரப்பு ஏற்ப்பட்டது. இதை தொடர்ந்து ஆதிபுருஷ் படத்திற்கு நேபாளத்தில் தடை விதிக்கப்பட்டுள்ளதும்,  தலைநகர் காத்மாண்டு மற்றும் சுற்றுலா நகரமான பொக்ராவில் அனைத்து ஹிந்திப் படங்களுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

Indian 2: இறுதி கட்டத்தை எட்டிய இந்தியன் 2 படப்பிடிப்பு! ரிலீஸ் தேதி குறித்து கசிந்த லேட்டஸ்ட் அப்டேட்!

இப்படி அடுத்தடுத்து ஆதிபுருஷ் படத்திற்கு எதிராக சர்ச்சைகள் வெடிக்க காரணம், இப்படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகளும், வசனங்களும் தான். குறிப்பாக  சீதாவை ‘இந்தியாவின் மகள்’ என்று கூறுவது போல் இந்தப் படத்தில் இடம்பெற்றுள்ள வசனங்கள் குறித்து நேபாளத்தில் சர்ச்சை அதிகரித்துள்ளது.

இதன் காரணமாக காத்மாண்டுவில் உள்ள 17 திரையரங்குகளில் இந்தி படங்கள் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளது. போலீசாரும் அங்கு குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. நேபாளத்தில் மட்டுமல்லாது இந்தியாவிலும் ஆதிபுருஷ் படத்தில் ‘ஜானகி பாரத் கி ஏக் பேட்டி ஹை’ என்ற வசனத்தை நீக்கும் வரை காத்மாண்டு மெட்ரோபாலிட்டன் சிட்டியில் எந்த ஹிந்திப் படமும் ஓட அனுமதிக்கப்படாது என்று காத்மாண்டு மேயர் பாலேந்திர ஷா நேற்று தெரிவித்தார்.

மிதமிஞ்சிய கவர்ச்சியில் ரித்திகா சிங்! இணையத்தை சூடேற்றிய போட்டோஸ்!

இதுகுறித்து காத்மாண்டு மேயர் கூறுகையில், ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள இந்த வசனங்களை நீக்காமல் திரையிடுவது பெரும் நஷ்டத்தை ஏற்படுத்தும். அதேசமயம், திங்கள்கிழமை முதல் திரையரங்குகளில் திரையிட படமாட்டாது என பொக்ரா மெட்ரோபோலிஸ் மேயர் தன்ராஜ் ஆச்சார்யா தெரிவித்தார். நேபாளத்தில் இந்துக்களின் மக்கள் தொகை சுமார் 80 சதவீதம். சீதை நேபாளத்தில் உள்ள ஜனக்பூரில் பிறந்தாள் என்று இங்கிருக்கும் மக்கள் நம்புகிறார்கள்.

இது ஒரு காலத்தில் ராஜர்ஷி ஜனக்கின் கீழ், மிதிலா இராச்சியத்தின் ஒரு பகுதியாக இருந்தது. சீதைக்கு 'ஜானகி' என்று பெயர். ஏனென்றால் அவள் ஜனக் மன்னனால் தத்தெடுக்கப்பட்டு அவனுடைய மகளாக வளர்க்கப்பட்டாள். ஜனக்பூரில் ஒரு அற்புதமான ஜானகி கோவில் உள்ளது. இது மிதிலாவின் மகளான சீதாவுக்காக கட்டப்பட்டது. எனவே சீதா உலக மக்களால் போற்றப்படும் ஒரு தாயாக இருக்கிறார். என தெரிவித்தார்.

காட்டிக்கொடுத்த பார்த்திபன்! பொன்னியின் செல்வன் இன்கம் ரெய்டு மேட்டரை கூறி பகீர் கிளப்பிய பயில்வான்!

மேலும் ஜனக்பூர் சீதை பிறந்த இடம் மட்டுமல்ல, ராமர் வில்லை முறித்து ராமர் மற்றும் சீதை திருமணம் நடந்த இடமாகவும் நம்பப்படுகிறது. தற்போது ஆதிபுருஷ் படத்தில் இடம்பெற்றுள்ள வசனத்தால், அனைத்து ஹிந்தி படங்களும் தடை செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  விரைவில் ஆதிபுருஷின் வசனங்கள் மாற்றி அமைக்கப்படும் என படக்குழு தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

click me!