பிரபாஸின் மஸ்ஸனா போஸ்டருடன்... 'ஆதிபுருஷ்' ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

Published : May 06, 2023, 01:18 PM IST
பிரபாஸின் மஸ்ஸனா போஸ்டருடன்... 'ஆதிபுருஷ்' ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு!

சுருக்கம்

நடிகர் பிரபாஸ் நடித்துள்ள ஆதிபுருஷ் திரைப்படத்தின் ட்ரைலர், மே ஒன்பதாம் தேதியன்று வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.  

உலகெங்கிலும் உள்ள டிஜிட்டல் தளங்கள், இணையதளங்கள், திரையரங்குகள் ஆகியவற்றில் ஒரே தருணத்தில்.. ரசிகர்களிடையே பெரிதும் எதிர்பார்ப்பில் இருக்கும் ஓம் ராவத் இயக்கிய 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் பார்வையாளர்களிடையே மிகவும் எதிர்பார்ப்பில் இருக்கும் திரைப்படங்களில் ஒன்றான 'ஆதி புருஷ்' திரைப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா மே மாதம் ஒன்பதாம் தேதியன்று நடைபெற உள்ளது. இதனை, பான் இந்திய நட்சத்திரமாக ஜொலிக்கும் பிரபாஸ் இடம்பெறும் புதிய போஸ்டரை வெளியிட்டு படக் குழுவினர். ஓம் ராவத் இயக்கத்தில்  உருவாகியுள்ள, இந்த பிரம்மாண்டமான படைப்பு... இதற்கும் முன் நியூயார்க்கில் நடைபெற்ற ட்ரிபெகா சர்வதேச திரைப்பட விழாவில் பிரத்யேக திரையிடலுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதன் மூலம் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. 

எதிர்ப்புக்கு மத்தியில்... எகிறிய 'தி கேரளா ஸ்டோரி' படத்தின் முதல் நாள் பாக்ஸ் ஆபீஸ் வசூல்! இத்தனை கோடியா?

மேலும் அவவ்போது புதிய தகவல்களுடன் வெளியிடப்படும், பிரத்யேக போஸ்டர் மற்றும் காணொளிகள், ரசிகர்கள் மத்தியில், பெரும் வரவேற்பை பெற்று சாதனை படைத்து வருகிறது. இதனை தொடர்ந்து தற்போது இப்படத்தின் ட்ரைலர் ரிலீஸ் தேதியை அறிவித்து, பிரபாஸ் ரசிகர்களை உற்சாகமடைய வைத்துள்ளது படக்குழு. அதன்படி, இப்படத்தின் ட்ரைலர் இந்தியாவில் மட்டுமல்லாமல் 70க்கும் மேற்பட்ட நாடுகளில் உலகளாவிய அளவில் வெளியிடப்படவிருக்கிறது. 

இது கேவலமான விஷயம்! 30 வருஷமா...மனோ பாலாவுக்கு இருந்த கெட்ட பழக்கம் பற்றி போட்டுடைத்த பயில்வான்!

இந்தியாவில் மட்டுமின்றி அமெரிக்கா, கனடா, மத்திய கிழக்கு நாடுகள், ஆஸ்திரேலியா, நியூசிலாந்து, சிங்கப்பூர், இந்தோனேசியா, தாய்லாந்து, மலேசியா, ஹாங்காங், பிலிப்பைன்ஸ், மியான்மர், இலங்கை, ஜப்பான் உள்ளிட்ட தென்கிழக்கு ஆசிய மற்றும் தெற்காசிய நாடுகளில் மட்டுமல்லாமல், ஆப்பிரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பா, ரஷ்யா, எகிப்து உள்ளிட்ட உலக நாடுகளிலும் இந்த பிரம்மாண்டமான முன்னோட்டம் வெளியாகிறது. இந்த முன்னோட்டம் உலகளாவிய பார்வையாளர்களை அதிரடியான உலகிற்கு அழைத்துச் செல்வது உறுதி.‌

இது என்ன சிவகார்த்திகேயனுக்கு வந்த சோதனை? அதிரடியாக மாற்றப்பட்ட 'மாவீரன்' நியூ ரிலீஸ் தேதி அறிவிப்பு!

இயக்குநர் ஓம் ராவத் இயக்கத்தில் தயாரான 'ஆதி புருஷ்' திரைப்படத்தை டி சீரிஸ் பூஷன் குமார் & கிரிஷன் குமார், ஓம் ராவத், பிரசாத் சுதார், ரெட்ரோ ஃபைல்ஸின் ராஜேஷ் நாயர் மற்றும் யு வி கிரியேசன்ஸின் பிரமோத் - வம்சி ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். இந்த திரைப்படம் ஜூன் மாதம் 16ஆம் தேதியன்று உலகம் முழுதும் வெளியாவது குறிப்பிடத்தக்கது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அட்லீ, லோகேஷை தொடர்ந்து நெல்சனையும் தட்டிதூக்கிய பான் இந்தியா ஸ்டார் - வந்தாச்சு அடிதூள் அப்டேட்...!
ராம் சரணின் பெத்தி படம் தள்ளிப்போகிறது... காரணம் என்ன தெரியுமா?