இயக்குநர் விக்ரமனின் உறவினரது இரு சக்கர வாகனம் திருட்டு; போலீசில் புகார்!

Published : May 06, 2023, 10:31 AM IST
இயக்குநர் விக்ரமனின் உறவினரது இரு சக்கர வாகனம் திருட்டு; போலீசில் புகார்!

சுருக்கம்

இயக்குநர் விக்ரமன் வீட்டு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அவரது உறவினரது இரு சக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  

தமிழ் சினிமாவில் குடும்ப கதையை மையப்படுத்தி ஏராளமான ஹிட் படங்களை கொடுத்தவர் இயக்குநர் விக்ரமன். சரத்குமார் நடித்த சூர்யவம்சம், விஜய் நடித்த பூவே உனக்காக, விஜயகாந்த் நடித்த வானத்தைப் போல என்று மாஸான படங்களை கொடுத்துள்ளார். இவர், தற்போது சென்னை அசோகர் நகர் பகுதியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஜாபர்கான்பேட்டை பகுதியைச் சேர்ந்த ருக்குமணி என்பவர் விக்ரமனின் உறவினர். இவர் தான் தனது குடும்பத்தோடு அவரது வீட்டிற்கு வந்து செல்வதை வாடிக்கையாக கொண்டுள்ளார். நேற்று காலை 11 மணியளவில் விக்ரமனின் வீட்டிலிருந்து தனது வீட்டிற்கு செல்வதற்காக இரு சக்கர வாகனத்தை எடுக்க வெளியில் வந்துள்ளார். ஆனால், அப்போது வீட்டு வாசலில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த தனது இரு சக்கர வாகனம் காணாமல் போயிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

இதையடுத்து தனது வீட்டில் பொறுத்தப்பட்டிருந்த சிசிடிவி காட்சிகளை விக்ரமன் ஆய்வு செய்த போது அதில் 2 இளைஞர்கள் முகத்தை மறைத்துக் கொண்டு வந்து இரு சக்கர வாகனத்தை திருடிச் சென்றது தெரிய வந்தது. இதனையடுத்து ருக்குமணி குமரன் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இச்சம்பவம் குறித்து தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அளித்த பேட்டியில் இயக்குநர் விக்ரமன் கூறியிருப்பதாவது: இது போன்ற சம்பவம் இதுவரையில் நடந்ததில்லை. தனது வீட்டில் நிறுத்தப்பட்டிருந்த இருசக்கர வாகனம் திருடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து புகார் தெரிவித்த நிலையில் போலீசார் விரைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

RK
About the Author

Rsiva kumar

நான் சிவக்குமார். கம்ப்யூட்டர் அப்ளிகேஷன் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றுள்ளேன். கடந்த 7 ஆண்டுகளாக இணைய ஊடகத்துறையில் பணியாற்றி வருகிறேன். சினிமா, கிரிக்கெட், ஜோதிடம், ஆன்மீகம் தொடர்பான செய்திகள் எழுதி வருகிறேன். தற்போது ஏசியாநெட் நியூஸ் தமிழ் இணையதளத்தில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறேன்.சிவக்குமார் எம்பிஏ படித்து முடித்துள்ளார். இவருக்கு டிஜிட்டல் மீடியாவில் 8 வருட பணி அனுபவம் உள்ளது. இப்போது ஏசியாநெட் நியூஸ் தமிழில் சப் எடிட்டராக பணியாற்றி வருகிறார். சினிமா, விளையாட்டு, ஜோதிடம், ஆன்மிகம் ஆகியவற்றில் ஆர்வம் உள்ளவர். அதுதொடர்பான சிறப்பு செய்திகளை எழுதி வருகிறார்.Read More...
Read more Articles on
click me!

Recommended Stories

என்னுடைய மகனுக்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பா? கொந்தளித்த கோமதி: பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல்!
நடிகை தாக்கப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் விய்யூர் சிறைக்கு மாற்றம்; நடிகர் திலீப் விடுதலை!