சந்தூர் மம்மிக்கே டஃப் கொடுக்கும் த்ரிஷாவின் அம்மா... வைரலாகும் அன்சீன் போட்டோக்களை பார்த்தீங்களா?

Published : Jul 06, 2024, 03:16 PM ISTUpdated : Jul 06, 2024, 03:22 PM IST
சந்தூர் மம்மிக்கே டஃப் கொடுக்கும் த்ரிஷாவின் அம்மா... வைரலாகும் அன்சீன் போட்டோக்களை பார்த்தீங்களா?

சுருக்கம்

நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன.

16 வயதில் மாடலாக தனது திரை வாழ்க்கையை தொடங்கி த்ரிஷா கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ் சினிமாவில் கோலோச்சி வருகிறார். 1999-ம் ஆண்டு வெளியான ஜோடி படத்தில் சிம்ரனின் தோழியாக ஒரு சிறிய கேரக்டரில் நடித்த த்ரிஷா இன்று தென்னிந்திய சினிமாவின் குயினாக வலம் வருகிறார். பிரியதர்ஷன் இயக்கிய லேசா லேசா படத்தில் முதலில் கமிட் ஆனாலும் மௌனம் பேசியதே படம் முதலில் வெளியானதால் அதுவே திரிஷா முதல் படமாக மாறியது. 

இதை தொடர்ந்து மனசெல்லாம், சாமி, எனக்கு 20 உனக்கு 18, கில்லி, ஆயுத எழுத்து, திருப்பாச்சி, ஆறு என பல படங்களில் நடித்தார். இதன் மூலம் குறுகிய காலத்திலேயே விஜய், அஜித், சூர்யா, சிம்பு, கமல், விக்ரம் என அப்போது டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்தார் த்ரிஷா. இதனிடையே தொடர் வெற்றி படங்கள் மூலம் தெலுங்கு திரையுலகிலும் முன்னணி நடிகையாக மாறினார் த்ரிஷா..

எவர்கிரீன் பியூட்டீஸ்.. வரலட்சுமி திருமணத்தில் இளம் ஹீரோயின்களுக்கே டஃப் கொடுத்த 80's ஹீரோயின்ஸ்..

அபியும் நானும், விண்ணை தாண்டி வருவாயா, கொடி, 96, பொன்னியின் செல்வன் 1, பொன்னியின் செல்வன் 2 ஆகிய படங்களில் த்ரிஷாவின் நடிப்பு பல தரப்பினராலும் பாராட்டப்பட்டது. நடிகை த்ரிஷா கடைசியாக லியோ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்தார்.

திரையுலகில் அவ்வப்போது பல சறுக்கல்களை சந்தித்தாலும் த்ரிஷா தற்போது வரை உச்ச நடிகையாகவே தொடர்கிறார். அந்த வகையில் தற்போது அஜித்தின் விடா முயற்சி, மணிரத்னம் – கமல் கூட்டணியில் உருவாகி வரும் தக் லைஃப் ஆகிய படங்களிலும் நடித்து த்ரிஷா வருகிறார். இவை தவிர தெலுங்கு, மலையாள படங்களிலும் நடித்து வருகிறார். 

கீர்த்தியுடன் கிளாமர் போட்டியில் குதித்த காவ்யா! ஹாட் லுக்கில் கண் குளிர வைக்கும் குட்டி தேவதை!

இதனிடையே விஜய் - த்ரிஷா ரிலேஷன்ஷிப் குறித்து பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. த்ரிஷா - விஜய் தொடர்பான புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது. கடந்த 2 வாரங்கள் இந்த விவகாரம் இணையத்தில் பேசு பொருளான நிலையில், மற்றவர்கள் சொல்லும் கருத்துகளை தலையில் ஏற்றுக்கொள்ள வேண்டாம் என்ற ரீதியில் த்ரிஷா சமீபத்தில் மறைமுகமாக பதிலளித்திருந்தார்.

இந்த நிலையில் நடிகை த்ரிஷா தனது அம்மா உமா கிருஷ்ணனுடன் இருக்கும் போட்டோக்கள் அடங்கிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. அந்த வீடியோவில் த்ரிஷா தனது அம்மா உடன் இருக்கும் பல அன்சீன் போட்டோக்கள் இருக்கின்றன. இந்த போட்டோக்களை பார்த்த ரசிகள் த்ரிஷாவை விட அவரின் அம்மா க்யூட்டாக இருப்பதாகவும், சந்தூர் மம்மி என்றும் கமெண்ட் செய்து வருகின்றனர். 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!