சென்னையில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் குறித்து எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள கமல்ஹாசன் தமிழக அரசு குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.
சென்னை, பெரம்பூர் வேணுகோபால்சாமி தெருவில் வசித்து வரும் 52 வயதான பகுஜன் சமாஜ் தேசிய கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங், நேற்று இரவு தனது வீட்டின் வெளியே நண்பர்களுடன் பேசிக்கொண்டிருந்த போது, உணவு டெலிவரி ஊழியர்கள் போல் அங்கு வந்த மர்ம குடும்பம் கண் இமைக்கும் நேரத்தில் பதுக்கி வைத்திருந்த பயங்கர ஆயுதங்களை கொண்டு ஆம்ஸ்ட்ராங்கை சரமாரியாக வெட்டி விட்டு அங்கிருந்து தப்பித்தனர்.
இந்த சம்பவம் நேற்று பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், வெட்டு காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் சரிந்த ஆம்ஸ்ட்ராங் சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மிகவும் கவலைக்கிடமான நிலையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேலும் இந்த சம்பவத்தை தொடர்ந்து எவ்வித அசம்பாவிதமும் நடைபெறாத வண்ணம் சென்னையின் பல பகுதிகளில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
undefined
இந்த கொலை சம்பவம் தொடர்பாக குற்றவாளிகளை பிடிக்க 10 தனிப்படைகள் அமைத்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டதில், இதுவரை 8 பேர் சரணடைந்துள்ளனர். ஆற்காடு சுரேஷின் தம்பி பாலு, ராமு, திருவேங்கடம், திருமலை, செல்வராஜ், மணிவண்ணன், சந்தோஷ், அருள் ஆகிய 8 பேர் கைது செய்யப்பட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் பழிவாங்கும் படலமாகவே இந்த கொலை நடந்திருப்பது தெரியவந்துள்ளது.
குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் கூட தப்பித்து விட கூடாது என்பதில் குறியாக இருக்கும் போலீசார்... இந்த வழக்கின் பின்னணி குறித்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். தமிழகத்தில் ஒரு வழக்கறிஞரை பட்ட பகலில் இப்படை கொலை செய்திருப்பது, நாடு எங்கே செல்கிறது என்கிற அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. மேலும் அரசியல் தலைவர்கள் பலர் இந்த சம்பவத்திற்கு தங்களின்கருத்தை வெளிப்படுத்திவரும் நிலையில், உலக நாயகன் கமல்ஹாசனும் ஆதங்க பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
அதில் கூறி இருபதாவது, "பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தொடர்ந்து குரல் கொடுத்து வந்த அவரது மறைவு பட்டியலின மக்களுக்குப் பேரிழப்பாகும்.
ஒரு தேசியக் கட்சியின் மாநிலத் தலைவர் கூலிப் படையினரால், மக்கள் நடமாட்டம் மிகுந்த பகுதியில் படுகொலை செய்யப்பட்டிருப்பது கடும் கண்டனத்துக்குரியது. இதில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உடனடியாக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்துகிறேன்'. என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவரும், வழக்கறிஞருமான ஆம்ஸ்ட்ராங் கொடூரமான முறையில் வெட்டிக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும், வேதனையையும் அளிக்கிறது. அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் பகுஜன் சமாஜ் கட்சியினருக்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும்…
— Kamal Haasan (@ikamalhaasan)