இப்பவும் இவ்வளவு யங்கா இருக்காங்களே.. விலை உயர்ந்த BMW காரை வாங்கிய பிரபல நடிகை.. யாருன்னு தெரியுதா?

By Ramya sFirst Published Jul 6, 2024, 8:49 AM IST
Highlights

நடிகை நவ்யா நாயர் புதிய BMW X7 ஆடம்பர சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்திய சந்தைகளில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்றாகும்.

மலையாளத்தில் பல வெற்றி படங்களில் நடித்து முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை நவ்யா நாயர். இவர் தமிழில் அழகிய தீயே படத்தின் மூலம் அறிமுகமானார். பின்னர் சேரனின் மாயக்கண்ணாடி படத்தில் நடித்தார். பின்னர் ஒரு சில தமிழ் படங்களில் அவர் தமிழில் கடைசியாக 2010-ம் ஆண்டு வெளியான ரசிக்கும் சீமானே என்ற படத்தில் நடித்தார். எனினும் தொடர்ந்து மலையாளம் மற்றும் கன்னட படங்களில் நடித்து வருகிறார். அவர் கடந்த ஆண்டு வெளியான ஜானகி ஜானே என்ற மலையாள படத்தில் கடைசியாக நடித்திருந்தார். 

இந்த நிலையில் நடிகை நவ்யா நாயர் புதிய BMW X7 ஆடம்பர சொகுசு காரை வாங்கி உள்ளார். இந்திய சந்தைகளில் கிடைக்கும் மிகவும் விலை உயர்ந்த கார்களில் இதுவும் ஒன்றாகும். அதன்படி இந்திய சந்தையில் தற்போது BMW X7 காரின் ஆரம்ப நிலை வேரியண்டின் விலை ரூ. 1.30 கோடியாகும். இதன் டாப் வேரியண்டின் விலை 1.34 கோடி ரூபாயாக உள்ளது. 
3.0 லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் என இந்த காரில் டபுள் என்ஜின் ஆப்ஷன்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

Latest Videos

கல்ட் கிளாசிக் படமான 16 வயதினிலே பட டாக்டரை மறக்க முடியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?

இதில் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சம் 381 பிஎஸ் பவர், 520 என்.எம் டார்க் திறனை உருவாக்ககூடிய வகையில் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. அதே நேரம் டீசல் என்ஜினானது 340 பிஎஸ் பவர், 580 என்.எம் டார்க் திறனை உருவாக்ககூடிய வகையில் டியூனிங் செய்யப்பட்டுள்ளது. மேலும் இதில் ஆல் வீல் ட்ரைவிங் சிஸ்டம் வழங்கப்பட்டுள்ளது. 

கமல்ஹாசன், சிம்பு, உட்பட 4 நடிகர்களுக்கு ரெட் கார்டு? உண்மை என்ன... நடிகர் சங்கம் சார்பில் பரபரப்பு அறிக்கை!

இந்த சொகுசு கார் மணிக்கு 100 கி.மீ  என வேகத்தை வெறும் 5.9 வினாடிகளில் எட்டி விடக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் பல்வேறு அதிநவீன வசதிகளும் பொருத்தப்பட்டுள்ளன. அதன்படி 14.9 இன்ச் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், 12.3 இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்டர், 16 ஸ்பீக்கர் ஹார்மன் கார்டன் மியூசிக் சிஸ்டம், டிஜிட்டல் கீ,, பனரோமிக் சன்ரூஃப் என பல வசதிகள் இடம்பெற்றுள்ளன. மேலும் இதில் 7 ஏர்பேக்கள், 360 கேமரா என பல பாதுகாப்பு அம்சங்களும் பொறுத்தப்பட்டுள்ளன. 

click me!