- Home
- Gallery
- கல்ட் கிளாசிக் படமான 16 வயதினிலே பட டாக்டரை மறக்க முடியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
கல்ட் கிளாசிக் படமான 16 வயதினிலே பட டாக்டரை மறக்க முடியுமா? இப்ப என்ன செய்கிறார் தெரியுமா?
16 வயதினிலே படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக உள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் , கமல், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.

Bharathiraja
தமிழ்த் திரையுலகில் தவிர்க்க முடியாத சிறந்த இயக்குனர்களில் பாரதிராஜாவும் ஒருவர். பாரதிராஜா படம் என்றாலே கிராமத்து மணமும் யதார்த்த நடிப்பும் இருக்கும். தனது படங்கள் மூலம் ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார் பாரதிராஜா.கார்த்தி, ராதா, ரேவதி, ராதிகா உள்ளிட்ட பல பிரபலங்களை அறிமுகம் செய்தவர். இவர் இயக்கிய 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில் ஆகியவை சூப்பர் ஹிட்டானது.
16 Vayathinile
குறிப்பாக 16 வயதினிலே படம் தமிழ் சினிமாவின் கல்ட் கிளாசிக் படங்களில் ஒன்றாக உள்ளது. பாரதிராஜா இயக்கத்தில் 1977-ம் ஆண்டு வெளியான இந்த படத்தில் , கமல், ஸ்ரீதேவி, ரஜினி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படத்தில் சப்பானியாக கமலும், மயிலு கேரக்டரில் ஸ்ரீதேவியும், பரட்டை கேரக்டரில் ரஜினியும் நடித்திருப்பார்கள்.
16 vayathinile
மேலும் 16 வயதினிலே படத்தில் வரும் டாக்டர் கேரக்டரை அவ்வளவு எளிதில் மறந்திருக்க மாட்டோம். சத்யஜித் என்ற நடிகர் தான் டாக்டராக நடித்திருப்பார். கர்நாடக மாநிலத்தை சேர்ந்த இவர், திரைப்படக்கல்லூரியில் தங்கப்பதக்கம் வாங்கியவர்.
Sathyajith 16 vayathinile
இதுகுறித்த செய்தியை பேப்பரில் படித்த பாரதிராஜா, அவரை 16 வயதினிலே படத்தில் டாக்டர் கேரக்டரில் நடிக்க வைத்துள்ளார். 16 வயதினிலே படத்திற்கு பின் அவர் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அவருக்கு பெரிதாக எந்த படமும் அமையவில்லை. எனினும் அவர் தொடர்ந்து சீரியல்களில் நடித்து வந்தார்.
Sathyajith
கடைசியாக 2022-ம் ஆண்டு ஒரு கன்னட படத்தை இயக்க உள்ளதாக சத்யஜித் அறிவித்தார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் தற்போது போஸ்ட் புரடக்ஷன் பணிகள் நடந்து வருவதாக கூறப்படுகிறது.