நீண்ட கால நண்பர்கள் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்ட தருணத்தைக் காட்டும் இந்த கேன்டிட் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் தெலுங்கு நடிகர் மோகன் பாபு இருவரும் 70 களில் ஒரே நேரத்தில் தங்கள் திரையுலக வாழ்க்கையைத் தொடங்கினர். பின்னர் லட்சக்கணக்கான ரசிகர்களின் மனதைக் கவர்ந்து சூப்பர் ஸ்டார் நடிகர்களாக மாறிவிட்டனர். அதே நேரத்தில், இருவரும் பல ஆண்டுகளாக நண்பர்களாக உள்ளனர்.
இந்நிலையில், ஹைதராபாத் செல்லும் விமானத்தில் ரஜினியும் மோகன் பாபுவும் சந்தித்துப் பேசியுள்ளனர். அந்தத் தருணத்தைப் பகிர்ந்துகொள்ளும் வகையில் புகைப்படம் ஒன்று வைரலாகியுள்ளது . நடிகர் சரத்குமாரின் மகள் வரலட்சுமியின் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக மோகன் பாபு சமீபத்தில் சென்னை வந்திருந்தார். நிகழ்வுக்குப் பிறகு, நடிகர் ரஜினிகாந்துடன் ஹைதராபாத் திரும்பினார். ரஜினி சூட்டிங்கிற்காக அங்கு சென்றுள்ளார்.
இந்தப் பயணத்தில் மோகன் பாபு ரஜினிகாந்துடன் அமர்ந்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். ரஜினிகாந்த் ஒரு கையை மோகன் பாபுவின் தோளில் போட்டு, அவரது கன்னத்தைப் பிடித்துக்கொண்டிருக்கிறார். இருவரும் மகிழ்ச்சியாக புன்னகைத்தபடி போட்டோவில் போஸ் கொடுத்துள்ளனர். நீண்ட கால நண்பர்கள் தங்கள் அன்பைப் பகிர்ந்துகொண்ட தருணத்தைக் காட்டும் இந்த கேன்டிட் புகைப்படம் ரசிகர்களைப் பெரிதும் கவர்ந்துள்ளது.
மார்பக புற்றுநோயால் முடியை வெட்டிய பாலிவுட் நடிகை! மகளின் நிலையைக் கண்டு குமுறும் தாய்!!
అప్పుడు ఇప్పుడు ఎప్పుడైనా స్నేహమేరా జీవితం... pic.twitter.com/rG5izlETSe
— Mohan Babu M (@themohanbabu)வியாழக்கிழமை, அவர்கள் இருவரும் ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து ஒன்றாக வெளியேறும் வீடியோவும் சமூக ஊடகங்களில் வெளிவந்தது. பெடராயுடு (1995) தான் கடைசியாக ரஜினியும் மோகன் பாபுவும் இணைந்து நடித்த படம். இதுதான் ரஜினியின் கடைசி நேரடியனா தெலுங்குப் படமாகவும் உள்ளது.
இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கூலி படத்தின் படப்பிடிப்பிற்காக ரஜினிகாந்த் ஹைதராபாத் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு வாரத்திற்கு முன்பு, லோகேஷ் கனகராஜ் , ரஜினிகாந்த் மேக்அப்பில் இருக்கும் புகைப்படத்தைப் பகிர்ந்தார்.
தலைவர் 171 என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்தப் படத்தின் தலைப்பு ஏப்ரல் மாதம் வெளியிடப்பட்டது. படத்தின் டீஸரும் உடன் வெளியானது.