
கிட்ட தட்ட 15 வருடங்களாக தமிழ், தெலுங்கு ஆகிய மொழி படங்களில் கதாநாயகியாக நடித்து, அசத்தி வருபவர் நடிகை த்ரிஷா. விஜய், அஜித், ரஜினி, கமல், விக்ரம், என தமிழில் உள்ள அணைத்து முன்னணி நட்சத்திரங்களுடனும் நடித்துவிட்டார்.
30 வயதை கடந்தும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல், ஜாலி சிங்கிளாக வலம் வந்து கொண்டிருக்கும் இவருக்கு ரசிகர்கள் பட்டாளம் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
இந்நிலையில் தற்போது, ஊரடங்கு காரணமாக... வீட்டிலேயே முடங்கி இருக்கும் த்ரிஷா, உடல்பயிற்சி, நாய் குட்டியுடன் கொஞ்சல், என பொழுதை ஒரு பக்கம் கழித்து வந்தாலும், மற்றொரு புறம் அணைத்து பிரபலங்கள் போல், இவரும் எந்நேரமும் ஆன்லைனிலேயே மூழ்கியுள்ளார்.
மேலும் செய்திகள்: உண்மையை சொன்னதற்கு சிறையில் அடைப்பது சர்வாதிகாரம்! பொங்கி எழுந்த கமல்!
தற்போது நடிகை த்ரிஷா, இன்ஸ்டாகிராம் ஸ்டேட்டஸில் ரசிகர்களை பார்த்து, தன்னுடன் டேட்டிங் வர ஆசை இருக்கிறதா? என்கிற கேள்வியை கேட்டு அதற்காக ஒரு டெஸ்டும் வைத்துள்ளார்.
அதாவது, ஒருவேளை என்னுடன் டேட்டிங் வந்தால், நேரத்தை வீணாக்காமல் எப்படியெல்லாம் செலவிடுவீர்கள் என 500 வார்த்தைகளுக்கு குறையாமல் சிறிய கட்டுரை வடிவத்தில் எழுதி அதனை தனக்கு அனுப்புபடி கூறியுள்ளார்.
மேலும் செய்திகள்: ரஜினி பட நடிகை வீட்டில் பாலிவுட் நட்சத்திரங்களுடன் பார்ட்டி? போலீசாரின் விசாரணையில் வெளியான அதிர்ச்சி!
த்ரிஷாவின் இந்த குதுகளா அறிவிப்பை கேட்டதும், இவருடைய ரசிகர்கள் சும்மா தீயாய், கட்டுரையை எழுத துவங்கி விட்டார்கள் போல... த்ரிஷாவின் மனதை கட்டுரையால் கவர்ந்து அவருடன் டேட்டிங் செல்ல உள்ள அந்த நபர் யார் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
ஆமா? இது உண்மை தானே... சும்மா விளையாட்டுக்கு போடலையே இது தான் சிலருடைய மைண்ட் வாய்ஸ் பாஸ்...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.