
வெள்ளாவி வச்சுதான் வெளுத்தார்களா? என்னும் வார்த்தை உண்மையில் தமன்னாவிற்கு தான் பொருந்தும். செக்கச்சிவந்த மேனி சிக்கென்ற உடல் தோற்றம் என ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட தமன்னா கேடி படத்தில் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். பின்னர் சூர்யா, கார்த்தி, பரத், தனுஷ், விஜய் என முன்னணி நாயகர்களுடன் ஜோடி போட்டு டாப் 10க்கு வந்தவர்.
பின்னர் ராஜமவுலியின் பாகுபலி இவருக்கு மிகப்பெரிய திருப்பு முனையை கொடுத்தது. இரண்டு பாகங்களிலும் கத்தியுடன் இவர் காட்டும் வித்தையும், முதல் பாகத்தில் அரை நிர்வாண நடனம் என கலங்கடித்து விட்டார். இறுதியா விஷாலின் ஆக்ஷன் படத்தில் நாயகியாக நடித்த இவர் தற்போது தெலுங்கு, இந்தி என பிசியாக இருக்கிறார்.
மேலும் செய்திகளுக்கு....உலகை பற்றி கவலையில்லை..இரண்டு குழந்தைகளுக்கு தாயான நடிகை சமீராவின் போல்ட் போஸ்..
தற்போது இவர் நடிப்பில் பாப்லி பவுன்சர் படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் செப்டம்பர் 23, 2022 அன்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் நேரடியாக திரையிடப்பட உள்ளது. இதோடு சேர்த்து மேலும் 4 பாலிவுட் படங்களில் ஒப்பந்தமாகியுள்ளார் தமன்னா.
மேலும் செய்திகளுக்கு.... பட்டுப் புடவையில் பார்ப்பவரை பதறவைக்கும் கீர்த்தி சுரேஷ்..தேவதையின் போட்டோஸ் உள்ளே!
இவர் தற்போது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள வீடியோ பலரின் பாராட்டுக்களையும் பெற்று வருகிறது. அதில் தமன்னா மண் பாத்திரங்களை உருவாக்கி வருகிறார். தமன்னா ஒரு சாதாரண கருப்பு டேங்க் டாப் மற்றும் ஸ்வெட் பேண்ட்டை அணிந்துள்ளார், குயவர் தமன்னாவுக்கு ஒரு சரியான பானையை எப்படி வடிவமைக்க வேண்டும் என்று கற்றுக்கொடுக்கிறார். மேலும் அதில் டிசைன்களைச் சேர்த்து, பானையை கச்சிதமாகத் தோற்றமளிக்க செய்கிறார் தமன்னா..
அந்த வீடியோவுடன் "மிஸ் பி மற்றும் அவரது இடைவேளை நேரம்" என்று சேர்த்து "#சுயபராமரிப்பு , #கற்றல் செய்தி திறன்கள் , #இருத்தல்" என் கேஷ் டேக் செய்துள்ளார்.
மேலும் செய்திகளுக்கு..."சமந்தாவை பார்த்தால் கட்டிப்பிடிப்பேன்"..முன்னாள் மனைவிக்கு பதிலடி கொடுத்த நாக சைதன்யா !
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.