மும்பையில் நடிகர் விஜய் வர்மா உடன் டின்னர் டேட்டிங் சென்றுவிட்டு அவருடன் ஜோடியாக நடிகை தமன்னா காரில் கிளம்பி செல்லும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தமன்னா. இவர் தற்போது பாலிவுட்டில் பிசியாகிவிட்டதால், தமிழில் அவ்வப்போது மட்டும் நடித்து வருகிறார். அந்த வகையில் நடிகை தமன்னா தற்போது ரஜினியின் ஜெயிலர் படத்தில் நடித்து வருகிறார். நெல்சன் இயக்கும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் தமன்னா. அவர் நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிக்கும் முதல் படம் இதுவாகும். இப்படத்தின் ஷூட்டிங் இறுதிகட்டத்தை எட்டி உள்ளது.
நடிகை தமன்னா சமீபகாலமாக காதல் சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். அதன்படி இவர் இந்தி நடிகர் விஜய் வர்மாவை காதலிப்பதாக நீண்ட நாட்களாகவே பேச்சு அடிபடுகிறது. இதற்கு காரணம் கடந்த ஜனவரி மாதம் கோவாவில் நடைபெற்ற புத்தாண்டு கொண்டாட்டத்தில் கலந்து கொண்ட நடிகை தமன்னா, அதில் நடிகர் விஜய் வர்மாவுக்கு லிப்லாக் முத்தம் கொடுத்த வீடியோ வெளியான பின்னர் தான் இவர்கள் காதலிப்பதாக செய்திகள் உலா வரத் தொடங்கின.
இதையும் படியுங்கள்... ஐடி ரெய்டால் மாவீரன் படத்துக்கு சிக்கல்... ஜி ஸ்கொயருக்கும் சிவகார்த்திகேயன் படத்துக்கும் உள்ள தொடர்பு என்ன?
இந்நிலையில், தற்போது அவர் இருவரும் ஜோடியாக ரொமாண்டிக் டின்னர் டேட்டிங் சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. மும்பையில் உள்ள ஓட்டல் ஒன்றிற்கு ஜோடியாக சென்ற தமன்னாவும், விஜய் வர்மாவும், பின்னர் காரில் ஒன்றாக கிளம்பி சென்றபோது எடுக்கப்பட்ட வீடியோ தான் தற்போது சோசியல் மீடியாவில் மிகவும் வைரலாகி வருகிறது. சிலரோ இவர்கள் பொறுத்தம் இல்லாத ஜோடி என்று ட்ரோல் செய்து வருகின்றனர்.
நடிகை தமன்னாவும் நடிகர் விஜய் வர்மாவும் தற்போது லஸ்ட் ஸ்டோரிஸ் 2ம் பாகத்தில் ஜோடியாக நடித்து வருகின்றனர். இதன் படப்பிடிப்பின் போது தான் இவர்கள் இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, பின்னர் அது காதலாக மாறியதாக கூறப்படுகிறது. ஆனால் இந்த காதல் விவகாரம் குறித்து இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் மெளனம் காத்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பாக்ஸ் ஆபிஸில் பட்டைய கிளப்பும் பாண்டியர்கள்... யாத்திசை படத்தின் 4 நாள் வசூல் இத்தனை கோடியா?