சித்தப்பா கமலுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் நடிகை சுஹாசினி!

Published : Mar 28, 2021, 01:17 PM ISTUpdated : Mar 28, 2021, 01:30 PM IST
சித்தப்பா கமலுக்காக தெருத்தெருவாக பிரச்சாரம் செய்யும் நடிகை சுஹாசினி!

சுருக்கம்

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில்  தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.  

கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன் முதன்முதலாக தேர்தலில் போட்டியிடுகிறார். இவருக்கு எதிராக அதிமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக சார்பில் தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் கோவை தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளார். இதனால் கோவை தெற்கு தொகுதியில் பிரச்சார களம் சூடு பிடித்துள்ளது.

மேலும் செய்திகள்: பாத் டப்பில்... உடையாக மாறிய சோப்பு நுரை..! படு மோசமாக கவர்ச்சி போஸ் கொடுத்த டிக்டாக் இலக்கியா!
 

இந்த தேர்தலில், பிரபலங்களின் பங்களிப்பு சற்று குறைவாக இருந்தாலும் பரபரப்பாகவே போய் கொண்டிருக்கிறது. இந்த முறை தேர்தல் களத்தில், ஸ்ரீபிரியா, சினேகன், கமல்ஹாசன், குஷ்பு, நடிகர் மன்சூர் அலிகான், மயில்சாமி, சரத்குமார்,  உள்ளிட்ட பலர் உள்ளனர். மேலும் நமீதா, கௌதமி, சி.ஆர்.சரஸ்வதி, செந்தில், ராதாரவி, வித்தியா உள்ளிட்ட பிரபலங்கள் தங்களுடைய ஆதரவு கட்சிக்கு தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார்கள்.

இந்நிலையில், இதுவரை அரசியல் குறித்து ஏதும் பேசாமல் இருந்து வந்த நடிகை சுஹாசினி... தன்னுடைய சித்தப்பா கமல்ஹாசனுக்கு ஆதரவாக கோவை தெற்கு தொகுதியில், திறந்த வாகனங்களிலும், தெருத்தெருவாக நடந்து சென்றும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். இதுவரை எந்த கட்சிக்கும் இவரும் இவரது கணவர் மணிரத்னம் ஆகியோர் ஆதரவு தெரிவித்து கூட பேசாத நிலையில் சுகாசினியின் இந்த திடீர் முடிவு ரசிகர்கள் மற்றும் திரையுலகினரையே ஆச்சர்யப்பட வைத்துள்ளது.

மேலும் செய்திகள்: 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் செம்ம ட்விஸ்ட்..! வயல் கார்டு சுற்றில் இருந்து ஃபைனலுக்கு சென்ற இருவர்!
 

நடிகை சுஹாசினி கையில் டார்ச் லைட்டை பிடித்தபடி.... பிரச்சாரம் செய்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ரஜினி ஒரு வருடம் காத்திருக்க தயாராக இருந்தும்... நீலாம்பரி கேரக்டர் வேண்டவே வேண்டாம் என தூக்கியெறிந்த நடிகை..!
அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!