
வர உள்ள தேர்தலில் சட்டமன்ற தேர்தலில் சில தொகுதிகளில் கடும் போட்டி நிலவி வருகிறது. குறிப்பாக கோவை தெற்கு தொகுதியில் மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல் ஹாசன், பாஜக சார்பில் வானதி சீனிவாசனும் நேருக்கு நேர் மோதுகின்றனர். அதுமட்டுமின்றி காங்கிரஸ் திமுக கூட்டணியின் சார்பில் காங்கிரஸ் கட்சியின் செயல் தலைவர்களில் ஒருவரான மயூரா ஜெயக்குமார், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான அப்துல் வகாப் ஆகியோர் போட்டியிடுவதால் கோவை தெற்கு தொகுதி நட்சத்திர அந்தஸ்து பெற்றுள்ளது.
வேட்புமனு தாக்கல் செய்த முதல் நாளில் இருந்தே கோவை தெற்கு தொகுதியில் வானதி சீனுவாசனுக்கும், கமல் ஹாசனுக்கும் இடையே வாக்கு சேகரிப்பில் கடும் போட்டி நிலவிவருகிறது. வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக கலா மாஸ்டர், கெளதமி, ராதா ரவி என நட்சத்திரங்கள் தினமும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். வழக்கமான தேர்தல் களமாக இல்லாமல் வேட்பாளர்கள் வித்தியாச, வித்தியாசமான டெக்னிக்குகளை பயன்படுத்தி வாக்கு சேகரித்து வருகின்றனர்.
அந்த வகையில் கோவை தெற்கு தொகுதியில், பாஜக வேட்பாளர் வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக நடிகை நமீதா நேற்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார். அப்போது திறந்தவெளி வேனில், வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட இவர்களுக்கு வாத்தி கம்மிங் பாடலுக்கு நடனமாடி, இளைஞர்கள் வரவேற்பு கொடுத்தனர். அப்போது வாத்தி பாடலுக்கு வானதி ஸ்ரீனிவாசனுடன் சேர்ந்து, நமீதா ஆட்டம் போட்ட வீடியோ தற்போது வெளியாகி வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.