சினிமா காட்சிகளை மிஞ்சிய... ராம் சரண் பிறந்தநாள் கொண்டாட்டம்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி!

Published : Mar 27, 2021, 04:11 PM IST
சினிமா காட்சிகளை மிஞ்சிய... ராம் சரண் பிறந்தநாள் கொண்டாட்டம்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த ராஜமௌலி!

சுருக்கம்

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராம் சரணுக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். 

எஸ்.எஸ்.ராஜமெளலியின் இயக்கத்தில் பிரபாஸ்,அனுஷ்கா,ரம்யா கிருஷ்ணன் என பல முன்னணி நட்சத்திரங்களின் வீர தீர நடிப்பில் வெளியாகிய பிரம்மாண்ட திரைப்படம் பாகுபலி. “பாகுபலி-1”, “பாகுபலி-2” என இரண்டு பாகங்களாக வெளியாகிய இத்திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸ் ஹிட் என்பது அனைவரும் அறிந்த ஒன்றே. இதனைத் தொடர்ந்து, சுதந்திர போராட்ட வீரர்களின் கதையை மையமாக கொண்டு  இயக்குநர் ராஜமெளலி “ஆர்ஆர்ஆர்” என்ற படத்தை இயக்கி வருகிறார்.

அல்லுரி சீதாராமராஜு எனும் புரட்சியாளரின் கதை தான் ஆர்.ஆர்.ஆர். படமாக உருவாகி வருகிறது.இந்த படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர்.,  அஜய் தேவ்கன்,  ஆலியா பட், சமுத்திரக்கனி, ராகுல் ராமகிருஷ்ணா, ஒலிவியா மொரிஸ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு பாகுபலி படத்திற்கு இசையமைத்த கீரவாணி இசையமைக்கிறார். செந்தில்குமார் ஒளிப்பதிவு செய்ய, ஸ்ரீகர் பிரசாத் படத்தொகுப்பு செய்கிறார். 350 கோடியிலிருந்து 400 கோடி வரையிலான செலவில் பிரம்மாண்டமாக படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஆர்.ஆர்.ஆர் படம் இந்த ஆண்டு அக்டோபர் 13ம் தேதி வெளியாகவுள்ள நிலையில், தற்போதே புரமோஷன் பணிகள் தீவிரமடைந்து வருகின்றன. 

ஹீரோ ராம்சரண் அல்லுரி சீதாராஜாராமு கதாபாத்திரத்தில் நடித்து வரும் நிலையில், ஆலியா பட் சீதா எனும் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். சமீபத்தில் ஆலியா பட்டின்  ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் ராஜமெளலி வெளியிட்டார். அது சோசியல் மீடியாவில் நல்ல வரவேற்பு பெற்றதை அடுத்து கையில் வில்லேந்தி அப்படியே ராமர் போல் காட்சியளிக்கும் ராம் சரணின் கேரக்டர் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. 

இந்நிலையில் இன்று பிறந்தநாள் கொண்டாடும் ராம் சரணுக்கு, ஷூட்டிங் ஸ்பாட்டில் இயக்குனர் ராஜமௌலி உள்ளிட்ட படக்குழுவினர், சினிமா காட்சிகளை மிஞ்சும் அளவிற்கு பிரமாண்டமாக பிறந்தநாளை கொண்டாடியுள்ளனர். ராம் சரணுக்கு மெய் சிலிர்க்கவைக்கும், இந்த தருணம் குறித்த வீடியோவை அவர்கள் வெளியிட அது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.  

இதுகுறித்த வீடியோ காட்சி இதோ...

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

அறந்தாங்கி நிஷாவின் பிரமிக்க வைக்கும் மாற்றம்: அழகுடன் சேர்ந்த ஆரோக்கியம்; 50 நாட்களில் நடந்த ஆச்சரியம்!
ரிஸ்க் எடுத்து நடிச்ச படம்; 2025ல் வசூலில் நம்பர் இடம் பிடித்த குட் பேட் அக்லீ: பாக்ஸ் ஆபீஸ் அப்டேட் ரிப்போர்ட்!