இந்த கல்யாணத்தில் நீங்கள் தான் முக்கிய விருந்தினர்! மறக்காம வந்துடுங்க... மாதவனின் வைரல் வீடியோ!

Published : Mar 27, 2021, 08:16 PM IST
இந்த கல்யாணத்தில் நீங்கள் தான் முக்கிய விருந்தினர்! மறக்காம வந்துடுங்க... மாதவனின் வைரல் வீடியோ!

சுருக்கம்

அதே இந்த தேர்தலில் தமிழகத்தில் 100 சதவீத வாக்களிக்கும் படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் மாதம் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

தமிழக சட்டமன்ற தேர்தல் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறுகிறது.  இந்நிலையில், வேட்பாளர்கள் கொரோனா மற்றும் கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் சூறாவளி பிரச்சாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வாக்கு சேகரித்து வருகின்றனர். இதுவரை எதிர்கொண்ட தேர்தலை விட இந்த தேர்தலில் எப்படியும் வெற்றிபெற வேண்டும் என, வேட்பாளர்கள் அனைவரும், விதவிதமாக... வித்தியாசமாக பிரச்சாரம் செய்து மக்களை கவர்ந்து வருகிறார்கள்.

கடந்த லோக் சபா தேர்தலில், மன்சூர் அலிகான் எப்படி... ஹோட்டல்களில் தோசை சுட்டும், பல்வேறு இடங்களிலும் வேலை செய்து மக்களை கவர்த்தாரோ... அதே பாணியை தான் தற்போது சட்டசபை தேர்தலில் போட்டியிடும் பல வேட்பாளர்கள் செய்து வருகிறார்கள். இதுகுறித்து பல்வேறு மீம்ஸுகளும் வலம் வருகிறது.

அதே இந்த தேர்தலில் தமிழகத்தில் 100 சதவீத வாக்களிக்கும் படி பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது. அந்த வகையில் நடிகர் மாதம் தற்போது வெளியிட்டுள்ள புதிய வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. அதில் அவர் கூறியுள்ளதாவது,  ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. எல்லோரும் தவறாமல் வந்துவிடுங்கள், வந்து நல்லபடியாக வாக்களித்து விட்டு செல்லுங்கள். என்ன ஒரு கல்யாணத்திற்கு அழைப்பது போல் அழைக்கிறேன் என்று பார்த்தீர்களா? இது நம் நாட்டின் கல்யாணம். அதில் அனைவரையும் விட முக்கியமான விருந்தினர் நீங்கள்தான். அதனால் மறக்காமல் வந்து ஏப்ரல் 6-ஆம் தேதி வாக்களியுங்கள்’ என்று கூறியுள்ளார். மேலும் கொரோனா பாதுகாப்புகள் அவசியம் என்பதையும் அவர் வலியுறுத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Sara Arjun : விக்ரமின் ரீல் மகளா இது? அடேங்கப்பா! கவர்ச்சி உடையில் என்னமா போஸ் கொடுக்குறாங்க..
Shivani Narayanan : எல்லாமே அப்படியே தெரியுது! சேலையில் கிளாமர் காட்டும் ஷிவானி நாராயணன் கிளிக்ஸ்