நடிகை ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை...! பகீர் கிளப்பும் முன்னால் துணை கமிஷனர்...!

 
Published : May 18, 2018, 03:07 PM ISTUpdated : Sep 19, 2018, 02:23 AM IST
நடிகை ஸ்ரீதேவி மரணம் திட்டமிட்ட கொலை...! பகீர் கிளப்பும் முன்னால் துணை கமிஷனர்...!

சுருக்கம்

actress sri devi death controversy issue doubt for commisnner

நடிகை ஸ்ரீதேவி மரணம்:

தமிழ் திரையுலகில் இருந்து பாலிவுட் திரையுலகிற்கு சென்று, லேடி சூப்பர் ஸ்டார் என்கிற அந்தஸ்தை பெற்றவர் நடிகை ஸ்ரீதேவி. இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் துபாய்க்கு, தன்னுடைய குடும்ப உறவினர் திருமணத்திற்கு சென்ற போது, எமிரேட்ஸ் டவர்... நட்சத்திர ஓட்டலில் அரை எடுத்து குடும்பத்தினருடன் தங்கி இருந்தார். 

இரவு உணவு அருந்துவதற்கு முன் குளிக்க சென்ற ஸ்ரீதேவி, பாத் டப்பில் மூழ்கி மரணமடைந்தார். இந்த தகவல் அனைத்து திரையுலக பிரபலங்களையும் அதிர்சியாக்கியது.

தள்ளுபடி செய்யப்பட்ட வழக்கு:

ஏற்கனவே ஸ்ரீதேவி மரணத்தில் சந்தேகம் இருப்பதாக இயக்குனர் சுனில் சிங் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். அந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.

சந்தேகம் கிளப்பும் கமிஷனர்:

இந்நிலையில், தற்போது தில்லியை சேர்ந்த ஓய்வு பெற்ற துணை போலீஸ் கமிஷனர் வேத் பூஷன், ஸ்ரீதேவியின் மரணம் இயற்கையானது அல்ல என்றும் திட்டமிட்டு கொலை செய்யப்பட்டுள்ளார் என்று சந்தேகத்தை எழுப்பி இருக்கிறார். தற்போது இவர் தனியார் துப்பறியும் நிறுவனம் ஒன்றினை நடத்தி வருகிறார்.

நேரில் சென்று விசாரணை:

மேலும் இது குறித்து அவர் கூறுகையில், துபாய் தடவியல் போலீசின் அறிக்கை திருப்திகரமாக இல்லை என்றும், அதோடு ஸ்ரீதேவி துபாயில் தங்கியிருந்த ஹோட்டலுக்கு விசாரணைக்காக தாங்கள் சென்றபோது அவர்கள் ஸ்ரீதேவி தங்கியிருந்த அறைக்குள் தங்களை அனுமதிக்க மறுத்து விட்டனர் என தெரிவித்துள்ளார். 

இதைத்தொடர்ந்து, பக்கத்து அறையில் தங்கி ஸ்ரீதேவியின் மரணம் குறித்து தாங்கள் விசாரித்தபோது அவரது மரணத்தில் மர்மம் இருப்பது தெரியவந்தது என்றும். ஆனால் இவருடைய மரணம் குறித்து அங்கு வேலை செய்பவர்கள் கூட சொல்ல மறுப்பதாக அவர் கூறியுள்ளார். 

முன்னால் துணை கமிஷனரின் இந்த குற்றச்சாட்டு, மீண்டும் ஸ்ரீதேவி மரணத்தைப் பற்றிய பரபரப்பை அதிகரித்துள்ளது. மேலும் ஸ்ரீதேவி மரணித்த போது அவருடைய கணவர் போனி கபூர் மட்டுமே அந்த இடத்தில் இருந்ததால் அனைவருடைய சந்தேகமும் அவர் மீது திரும்பியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

உயிர் போய் உயிர் வந்துருக்கு!" - பயங்கர கார் விபத்தில் சிக்கிய ரஜினி பட நடிகை நோரா ஃபதேஹி!
ஜவ்வா இழுக்கும் இயக்குநர்; ரொம்பவே ஒர்ஸ்ட்; சிறகடிக்க ஆசை சீரியலை கழுவி ஊற்றும் நெட்டிசன்கள்!