தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து நடுங்கிய நடிகை சினேகா..! காமெடியாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா..!

Published : Jul 18, 2021, 02:26 PM IST
தடுப்பூசி போட்டுக்கொள்ள பயந்து நடுங்கிய நடிகை சினேகா..! காமெடியாக வீடியோ வெளியிட்ட பிரசன்னா..!

சுருக்கம்

 தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா - பிரசன்னா ஜோடி தடுப்பூசி போட்டு கொடுள்ளனர்.

பிரபலங்கள் தொடர்ந்து, கொரோனா தொற்றுக்கு எதிரான தடுப்பூசி போட்டுக்கொள்வது மட்டும் இல்லாமல் ரசிகர்களும், மக்களும், எவ்வித அச்சமும் இன்றி தடுப்பூசி போட்டுக்கொள்ளவேண்டும் என்பதற்காக... தாங்கள் தடுப்பூசி போட்டு கொள்ளும் புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள். அந்த வகையில் தற்போது தமிழ் சினிமாவின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா - பிரசன்னா ஜோடி முதல் டோஸ் தடுப்பூசி போட்டு கொடுள்ளனர்.

கொரோனாவை முற்றிலும் தடுக்க தடுப்பூசி போட்டுக்கொள்வது என்பது மிகவும் அவசியமானது. தடுப்பூசி செலுத்தி கொண்டால், கொரோனா தொற்று ஏற்பட்டால் கூட... உயிர்சேதங்களை தடுக்க முடியும் என மருத்துவர்கள் மற்றும் சுகாதார துறையினர் கூறி வருகிறார்கள். அதே நேரத்தில், தமிழக மக்கள் அனைவருக்கும் தடுப்பூசி போட்டு முடிக்க வேண்டும் என்கிற முனைப்போடு செயல் படுகிறது மத்திய மற்றும் மாநில அரசுகள்.

ஆரம்பத்தில் மக்கள் தடுப்பூசி செலுத்தி கொள்வதில் தயக்கம் காட்டினாலும், சமீப காலமாக வரிசையில், சமூக இடைவெளியோடு நின்று தடுப்பூசி போட்டு கொள்வதில் ஆர்வம் காட்டுகிறார்கள். ஆனால் சில இடங்களில் தடுப்பூசி பற்றாக்குறை ஏற்படுகிறது. இதனை சரி செய்யும் முயற்சிகளையும் தமிழக அரசு எடுத்து வருகிறது. 

மேலும் ஏற்கனவே சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், சூர்யா, ஜோதிகா, சூரி, சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், உள்ளிட்ட பல முன்னணி நடிகர்கள் தடுப்பூசி போட்டு கொண்ட நிலையில், தற்போது தமிழ் திரையுலகின் நட்சத்திர ஜோடிகளின் ஒருவரான சினேகா - பிரசன்னா ஜோடி முதல் டோஸ்  தடுப்பூசி போட்டு கொண்டுள்ளனர். சினேகா மிகவும் தைரியமாக தடுப்பூசி போட்டு கொள்வது போல் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படம் வெளியிட்டருந்த நிலையில், சினேகா தடுப்பூசி போட்டு கொள்ள பயந்து நடுங்கிய வீடியோவை பிரசன்னா காமெடியாக வெளியிட்டுள்ளார்.

இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது: 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Kumaran in Bigg Boss: பிக்பாஸ் வீட்டில் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ கதிர்.. ரசிகர்களுக்கு வேற லெவல் சர்ப்ரைஸ்!
Bigg Boss 2026 : பிக்பாஸ் வரலாற்றிலேயே இப்படி ஒன்று நடந்தது இல்லையாம்!