நடிகை ஸ்ருதிஹாசனை கலங்க வைத்த மரணம்..! அதிர்ச்சியின் உச்சத்தில் திரை பிரபலங்கள்..!

By manimegalai aFirst Published Aug 17, 2020, 7:26 PM IST
Highlights

நடிகை ஸ்ருதிஹாசன், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து தமிழ், இந்தி,மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கிய, இயக்குனர் நிஷிகாந்த் காமத் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது, இந்த தகவலை மறுத்து, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் தற்போது இயக்குனர் நிஷிகாந்த் காமல் இறப்பை அவருடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.
 

நடிகை ஸ்ருதிஹாசன், மாதவன் உள்ளிட்ட பல பிரபலங்களை வைத்து தமிழ், இந்தி,மராத்தி உள்ளிட்ட மொழிகளில் பல படங்களை இயக்கிய, இயக்குனர் நிஷிகாந்த் காமத் இன்று காலை உயிரிழந்ததாக தகவல் வெளியானது, இந்த தகவலை மறுத்து, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக் தற்போது இயக்குனர் நிஷிகாந்த் காமத் இறப்பை அவருடைய சமூக வலைத்தளத்தில் உறுதி செய்துள்ளார்.

மேலும் செய்திகள்: மகாராணி போல் பளபளக்கும் நகைகள் அணிந்து... பிரமிக்க வைக்கும் உடையில் இந்துஜா நடத்திய லேட்டஸ்ட் போட்டோ ஷூட்!
 

நிஷிகாந்த் நடிகை ஸ்ருதிஹாசன் ஹிந்தியில் நடித்த ராக்கி ஹாண்ட்சம் படத்தை இயக்கியவர். மேலும், தமிழில்...  மாதவன் நடித்த  "எவனோ ஒருவன்" படத்தை இயக்கியுள்ளார். இந்நிலையில் இவர் உடல் நல குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

தென்னிந்திய மொழிகளில் பல படங்களை இயக்கியுள்ள இயக்குனர் நிஷிகாந்த் காமத் கல்லீரல் பிரச்சனை காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவருடைய உடல் நிலை கவலை கிடமாக உள்ளதாக கடந்த வாரம் மருத்துவமனை தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டது.

மேலும் செய்திகள்: பளபளக்கும் தொடையை காட்டியபடி போஸ் கொடுத்து... இளசுகளை மயக்கும் இடுப்பழகி ரம்யா பாண்டியன்..!
 

எனினும் ஹைதராபாத்தில் உள்ள பிரபல தனியார் மருத்துவமணையில் ஐ.சி.யூ பிரிவில், இவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. 50 வயதாகும், நிஷிகாந்த் காமத், ஏற்கனவே இறந்துவிட்டதாக வெளியான தகவலை வதந்தி என கூறிய ரித்தீஷ் தேஷ்முக் தற்போது, அவர் இறந்த தகவலை உறுதி செய்துள்ளார். அதே போல் நடிகை ஸ்ருதி ஹாசனும், தன்னுடைய இரங்கலை தெரிவித்து ட்விட் செய்துள்ளார்.

மேலும் மலையாளத்தில் வெளியாகி சூப்பர் ஹிட் வெற்றி பெற்ற திருஷ்யம், படத்தை ஹிந்தியில் அஜய் தேவ்கன், ஸ்ரேயா நடிப்பில் ரீமேக் செய்தார். தமிழில் இந்த படம் கமல் நடிப்பில் பாபநாசம் என்கிற பெயரில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றாலும், இந்தியில் பெரிய அளவில் வெற்றிபெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்: நடிகர் மற்றும் இயக்குனர் ராகவா லாரன்ஸின் பிரமாண்ட வீட்டை பார்த்திருக்கீங்களா? வாங்க பார்க்கலாம்..!
 

தொடர்ந்து பாலிவுட் திரையுலகை சேர்ந்த, ரிஷி கபூர், இர்பான் கான், சுஷாந்த் சிங், மற்றும் நிஷிகாந்த் காமத் என மனம் கவர்ந்த பிரபலங்களின் மரண செய்திகள் ஒட்டுமொத்த பிரபலங்களையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
 

:( Rest in peace Nishikant .. it was lovely working with you ..Thankyou for the stories and the smiles. My deepest condolences to the family

— shruti haasan (@shrutihaasan)

click me!