
ராஜமவுலி இயக்கியுள்ள ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் கடந்த மாதம் 25-ந் தேதி திரையரங்கில் வெளியானது. ரிலீஸானது முதல் அமோக வரவேற்பை பெற்று வரும் இப்படம், வசூலிலும் பட்டைய கிளப்பி வருகிறது. இப்படம் வெளியான 5 நாட்களில் ரூ.600 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. இப்படத்தில் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். நாயகர்களாக நடித்துள்ளனர்.
இப்படம் சுதந்திர போராட்ட வீரர்களான சீதாராம ராஜு மற்றும் கொமரம் பீம் ஆகியோரின் வாழ்க்கையை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு இருந்தது. இதில் சீதாராம ராஜுவாக ராம்சரண் நடித்திருந்தார். அதேபோல் கொமரம் பீம் ஆக ஜூனியர் என்.டி.ஆர் நடித்திருந்தார். மேலும் அஜய் தேவ்கன், ஆலியா பட், சமுத்திரக்கனி, ஷ்ரேயா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
குறிப்பாக நடிகை ஷ்ரேயா இயக்குனர் ராஜமவுலி உடன் பணியாற்றுவது இது இரண்டாவது முறை ஆகும். அவர் ஏற்கனவே ராஜமவுலி இயக்கத்தில் கடந்த 2005-ம் ஆண்டு வெளியான சத்ரபதி படத்தில் நடிகர் பிரபாஸுக்கு ஜோடியாக நடித்திருந்தார்.
இந்நிலையில், ஆர்.ஆர்.ஆர் படம் குறித்து சமீபத்திய பேட்டியில் நடிகை ஷ்ரேயா கூறியதைக் கேட்டு ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர். அவர் கூறியதாவது: “நான் இன்னும் ஆர்.ஆர்.ஆர் படம் பார்க்கல. எங்கு பார்த்தாலும் ஹவுஸ்புல் காட்சிகளாக இருப்பதால் எனக்கு டிக்கெட் கிடைக்கவில்லை. ராஜமவுலிக்காக இப்படத்தில் நான் நடித்தேன். ஆரம்பத்துல இப்படத்துல யார் ஹீரோனுகூட எனக்கு தெரியாது. பின்னர் தான் ராம்சரணும், ஜூனியர் என்.டி.ஆரும் நடிப்பது தெரியவந்தது” எனக் கூறி உள்ளார்.
யார் ஹீரோனு கூட தெரியாம நடிக்க ஒப்புக்கொண்டேன் என நடிகை ஷ்ரேயா கூறியதைக் கேட்டு ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஆர்.ஆர்.ஆர் படத்தின் கதைப்படி நடிகை ஷ்ரேயா நாயகன் ராம்சரணுக்கு தாயாக நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படியுங்கள்... BiggBoss Ultimate :பணப்பெட்டி உடன் சுருதி வெளியேறியதால் இந்தவார எவிக்ஷனில் காத்திருக்கும் மிகப்பெரிய டுவிஸ்ட்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.