
நடிகை சமந்தா திருமணத்திற்குப் பின்னரும், அடுத்தடுத்து தெலுங்கு மற்றும் தமிழ் படங்களில் நாயகியாக கமிட்டாகி நடித்து வருகிறார். அந்த வகையில் இவர் தெலுங்கில் நடித்து வந்த 'சாகுந்தலம்' படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்ததை தொடர்ந்து, இது குறித்து மிகவும் உணர்வுபூர்வமாக ட்விட்டரில் பதிவிட்டு, படக்குழுவினரிடம் இருந்து விடைபெற்றுள்ளார்.
வரலாற்று கதையை மையமாக வைத்து, பிரபல இயக்குனர் குணசேகரன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'சாகுந்தலம்'. இவர் ஏற்கனவே நடிகை அனுஷ்கா நடித்த 'ருத்ரமாதேவி' உள்ளிட்ட சூப்பர்ஹிட் படங்களை இயக்கி உள்ளார். இந்நிலையில் காளிதாசர் இயற்றிய 'சாகுந்தலம்' என்ற நூலை அடிப்படையாக வைத்து தற்போது உருவாகி உள்ளது 'சகுந்தலம்' திரைப்படம்.
இந்த படத்தில் சகுந்தலா என்கிற கதாபாத்திரத்தில் நடிகை சமந்தா நடித்துள்ளார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் மோகன்பாபு, கௌதமி, தேவ் மோகன், அதிதி பாலன், மற்றும் பிரபல நடிகர் அல்லு அர்ஜுனின் மகள் அர்ஹா உள்ளிட்ட பல நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கொரோனா பிரச்சனைகளுக்கு இடையிலும், மிகவும் பாதுகாப்புடன் நடந்து வந்த நிலையில் நேற்றுடன் முடிவடைந்தது. இதனை படக்குழுவினர் மிகவும் பிரம்மாண்டமாக கேக் வெட்டி சமந்தாவுடன் கொண்டாடியுள்ளனர்.
மேலும் இந்த தருணம் குறித்து நடிகை சமந்தா தன்னுடைய டுவிட்டரில் கூறியுள்ளதாவது... "சிறிய வயதில் பல விசித்திரமான கதைகளை கேட்டுளேன், இப்போதும் அதிலிருந்து நான் சற்றும் மாறவில்லை. இப்படி ஒரு சரித்திர படத்தில் நடிக்கவேண்டும் என்பது தன்னுடைய வாழ்நாள் கனவு. அது தற்போது இயக்குனர் குணசேகரன் அவர்களால் நிறைவேறி விட்டது. என்றும், இந்த குழுவில் இருந்து விடைபெறுகிறேன். இயக்குனர் குணசேகரன் மிகவும் அற்புதமான மனிதன். அற்புதமான உலகத்தை உருவாகி ஒரு குழந்தை போல் தன்னை மகிழவைத்து விட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.