
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. இதன் மூலமாக திரையுலகிற்கு பல பாடகர் மற்றும் பாடகிகள் கிடைத்துள்ளனர். தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் 8வது சீசன் நடைபெற்று வருகிறது. இந்த நிகழ்ச்சிக்கு பின்னணி பாடகர்கள் உன்னி கிருஷ்ணன், அனுராதா ஸ்ரீராம், பென்னி தயாள், எஸ்.பி.சரண் உள்ளிட்டோர் நடுவர்களாக உள்ளனர்.
தனது 40வது ஆண்டு பயணத்தை கொண்டாடும் விதமாக பிரபல பாடகியான சின்னக்குயில் சித்ரா இந்த வாரம் சூப்பர் சிங்கர் சீசன் 8 நிகழ்ச்சியில் பங்கேற்றுள்ளார். அப்போது, டாப் 7 போட்டியாளர்களின் ஒருவரான பரத்துடன் இணைந்து சித்ரா, சென்னை 6000028 படத்தில் இடம் பெற்ற ‘யாரோ யாருக்குள் இங்கு யாரோ’ என்ற பாடலை பாடினார்.
அந்த படத்திற்காக இந்த பாடலை சித்ராவும், எஸ்.பி.பாலசுப்ரமணியமும் பாடியிருந்தனர். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பரத் பாடும் போது அப்படியே எஸ்.பி.பி பாடுவது போலவே இருந்தது, இதனால் உணர்ச்சிவசப்பட்ட சரண் கண்ணீர் விட்டு கதறி அழ ஆரம்பித்தார். மேலும், தனது தந்தையை மிகவும் மிஸ் செய்வதாகவும் கண் கலங்கிய படியே தெரிவித்தார். இதோ அந்த வீடியோ...
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.