ஓடு ஓடு ஆடு... 'புஷ்பா' ஃபஸ்ட் சிங்கிள் பாடலில் மிரட்டும் அல்லு அர்ஜுன்..!

By manimegalai a  |  First Published Aug 13, 2021, 12:00 PM IST

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ஐந்து மொழிகளில் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
 


பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்திருக்கும் 'புஷ்பா' படத்தில் இருந்து முதல் சிங்கிள் பாடல் ஐந்து மொழிகளில் சற்று முன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

பிரபல இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், அல்லு அர்ஜுன் நடித்துவரும் திரைப்படம் 'புஷ்பா'. இந்த படத்தில் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக நடிகை ராஷ்மிகா மந்தனா முதல் முறையாக நடித்துள்ளார். இப்படம் முழுக்க முழுக்க செம்மரக்கடத்தல், மற்றும்  மரம் கடத்தலை மையமாக வைத்தும்...  அவர்களுடைய வாழ்க்கையை எடுத்துக் கூறும் வகையிலும் எடுக்கப்பட்டுள்ளது.  இப்படத்தில் அல்லு அர்ஜுன் லாரி டிரைவராகவும், மரம் கடத்துபவராகவும் வித்தியாசமான தோற்றத்தில் நடித்துள்ளார்.

Latest Videos

மேலும் பிரபல மலையாள நடிகர் பஹத் பாசில் மிரட்டல் வில்லனாக நடித்துள்ளார். 'புஷ்பா' திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, என மொத்தம் ஐந்து மொழிகளில் உருவாகி உள்ள நிலையில், இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வருகிறது. சமீபத்தில் இந்தப் படம் இரண்டு பாகங்களாக வெளியாக உள்ளதாக படக்குழு அறிவித்தது.  மேலும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் ஏற்கனவே வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் இன்றைய தினம் இப்படத்தின் முதல் சிங்கிள் பாடல் வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி சற்றுமுன் இந்த படத்தில் இடம்பெற்றுள்ள ஓடு ஓடு ஆடு' என்கிற  பாடலின் ஃபர்ஸ்ட் லுக் ஐந்து மொழிகளிலும் வெளியாகி உள்ளது. இப்படத்திற்கு பிரபல இசையமைப்பாளர் தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார். இப்படத்தின் முதல் பாகம் கிறிஸ்மஸ் தினத்தை ஒட்டி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது. தற்போது இந்த பாடலை அல்லு அர்ஜுன் ரசிகர்கள் ட்விட்டரில் கொண்டாடி வருகின்றனர்.

click me!