'டிடெக்ட்டிவ் நேசமணி' போஸ்டரை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்!

Published : Aug 13, 2021, 11:28 AM ISTUpdated : Aug 13, 2021, 02:20 PM IST
'டிடெக்ட்டிவ் நேசமணி' போஸ்டரை பற்றிய உண்மையை போட்டுடைத்த பிரபல தயாரிப்பாளர்!

சுருக்கம்

வைகை புயல் வடிவேலு, 'டிடெக்ட்டிவ் நேசமணி' என்கிற ஓடிடி தொடரில் நடிக்க உள்ளதை போல்... வேற லெவல் கெட்டப்பில் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இதுகுறித்து தற்போது பிரபல தயாரிப்பாளர் உண்மை தகவலை வெளியிட்டு, அந்த போஸ்டரை பாராட்டியுள்ளார்.  

வைகை புயல் வடிவேலு, 'டிடெக்ட்டிவ் நேசமணி' என்கிற ஓடிடி தொடரில் நடிக்க உள்ளதை போல்... வேற லெவல் கெட்டப்பில் போஸ்டர் ஒன்று வெளியான நிலையில், இதுகுறித்து தற்போது பிரபல தயாரிப்பாளர் உண்மை தகவலை வெளியிட்டு, அந்த போஸ்டரை பாராட்டியுள்ளார்.

காமெடி இம்சை அரசன் வடிவேலு  கடந்த 10 ஆண்டுகளாக திரைப்படங்களில் நடிக்காமல் இருந்தாலும், ஒவ்வொரு நாளும் இவரை வைத்து தான் பல மீம்ஸ் சிரியேட்டர்கள் பலரை சிரிக்க வைத்து வருகிறார்கள். எனவே திரைப்படங்களில் தோன்றாவிட்டாலும், ஒவ்வொரு நாளும் ஏதோ ஒரு விதத்தில் நம்மை சிரிக்க வைத்து வருகிறார் வைகை புயல்.  விரைவில் இவர் திரைப்படங்கள் நடிப்பார் என சில தகவல்கள் வெளிவந்த போதிலும்... இதுவரை இவர் நடிக்க உள்ள படங்கள் குறித்த எந்த ஒரு அதிகார பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை. அதே போல் 'இம்சை அரசன்' இரண்டாம் பாகம் பட பிரச்னையும் இதுவரை தீர்ந்த பாடு இல்லை.

இந்நிலையில், வடிவேலு ஓடிடி தளம் ஒன்றில் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் என கூறப்பட்டது. ஆனால் இப்போது வரை இதுகுறித்த எந்த ஒரு அதிகார பூர்வத்தகவலும் வெளியாக வில்லை. மேலும், தெலுங்கில் பல நிகழ்ச்சிகளை ஓடிடியில் வெற்றிகரமாக ஒளிபரப்பி வரும்... ஆஹா என்கிற ஓடிடி தளம் விரைவில் தமிழிலும் ஒரு தளத்தை உருவாக முடிவு செய்துள்ளதாகவும், இதற்காக ஒரு காமெடி நிகழ்ச்சி ஒன்றை தொகுத்து வழங்குவதற்கு வடிவேலுவை அணுகி பேச்சுவார்த்தை முடிந்து விட்டதாகவும், கூடிய விரைவில் இதுகுறித்த அறிவிப்புகளும் வெளியாகும் என கூறப்படுகிறது. 

எனவே விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நேற்று திடீர் என... நடிகர் வடிவேலு புதிய தோற்றத்தில் இருக்கும் 'டிடெக்ட்டிவ் நேசமணி' என்கிற போஸ்டர் ஒன்று வெளியாகியது. இதை, பிரபல தயாரிப்பாளர் சி.வி. குமார் தயாரிக்க உள்ளதாகவும், அமேசான் பிரீமில் இந்த தொடர் ஸ்ட்ரீமிங் செய்யப்படும் என்பது போல் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதை பார்த்து அதிர்ச்சியடைந்த தயாரிப்பாளர் சிவி குமார்... மிகவும் கூலாக, " Fake news uhh இருந்தாலும் ஓரு நியாயம் வேண்டாமாப்பா … ஆனா தலைவர் டிசைன்ல சூப்பர்ப்பா …என தெரிவித்திருந்தார்.

இதன் மூலம் இப்படி ஒரு தொடர் உருவாகவே இல்லை என்பது தெரியவந்துள்ளது. அதே நேரத்தில் இதை வைத்து படம் எடுத்தால் கூட நன்றாக இருக்கும் என, நெட்டிசன்கள் பலர் தங்களுடைய கருத்தை தெரிவித்து வருகிறார்கள். இந்த போஸ்டரும் சோசியல் மீடியாவில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது. 

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

Samantha : 'சாப்பிட பிடிக்காம இல்ல, சாப்பிட முடியல'... படாதபாடு படுத்திய மயோசிடிஸ்; கண்ணீர்க் கதையை பகிர்ந்த சமந்தா!
Engal Thangam Review : கம்பேக் கொடுத்தாரா சமந்தா? எங்கள் தங்கம் விமர்சனம் இதோ