
இயக்குனர் ஷங்கர், ராம் சரணை வைத்து இயக்க உள்ள, படத்தில் ஏற்கனவே நடிகை கியாரா அத்வானி ஹீரோயினாக கமிட் ஆகியுள்ள நிலையில், தற்போது மற்றொரு முக்கிய கதாபாத்திரத்தில், அஞ்சலி கமிட் ஆகியுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளதால்... இரண்டாவது நாயகியாக இவர் நடிக்கிறாரா? என்கிற சந்தேகம் தற்போது எழுந்துள்ளது.
இயக்குனர் ஷங்கர் தமிழில் நடிகர் கமல்ஹாசனை வைத்து இயக்கி வந்த 'இந்தியன் 2 ' திரைப்படம், இன்னும் முழுமையாக முடிக்கப்படாத நிலையில், இயக்குனர் ஷங்கர் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை இயக்குவதில் கவனம் செலுத்தி வருகிறார். இம்முறை தமிழ் பட ஹீரோக்களை வைத்து படம் இயக்காமல், தெலுங்கு பட நடிகர் ராம் சரணை வைத்து பிரமாண்டமாக உருவாக உள்ள படத்தை இயக்க உள்ளார்.
ராம் சரண் நடித்து வந்த ஆச்சார்யா, மற்றும் RRR படங்கள் இறுதி கட்டத்தில் உள்ளதால் இந்த படங்களை நடித்து முடித்த கையேடு ஷங்கர் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் என கூறப்படுகிறது. தற்போது இதற்கான ஆயத்த பணிகள் துரிதமாக நடந்து வருகிறது. மேலும் இந்த படம் குறித்த அடுத்தடுத்த தகவலைகளை படக்குழு வெளியிட்டு வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் இசையமைப்பாளர் தமன் என்றும், இந்த படத்தில்... தெலுங்கு மற்றும் ஹிந்தி மொழிகளில் நடித்து பிரபலமான நடிகை கியாரா அத்வானி நடிப்பதும் உறுதியாகி உள்ளது.
இந்நிலையில் தற்போது இந்த படத்தில், நடிகை அஞ்சலி இணைந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே பலரும் அஞ்சலி இரண்டாவது நாயகியாக நடிக்கிறாரா என்கிற கேள்வியை முன் வைத்து வருகிறார்கள். அஞ்சலி கடைசியாக நடிகர் பவன் கல்யாணின் 'பிங்க்' படத்தின் ரீமேக்காக எடுக்கப்பட்ட 'வக்கீல் சாப்' படத்தின் நடித்திருந்தார். இந்த படத்தில் அஞ்சலியின் நடிப்புக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதை தொடர்ந்து தெலுங்கு, கன்னடத்தில், ஒரு சில படங்களில் நடித்து வரும் அஞ்சலி தற்போது பான் இந்தியா படமாக உருவாகி வரும் ஷங்கர் படத்தில் இணைந்துள்ளார். இவரது கதாபாத்திரம் குறித்த தகவலும் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.