
தமிழில் நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக 'கேடி பில்லா கில்லாடி ரங்கா' படத்தில் அறிமுகமானவர் நடிகை ரெஜினா. இந்த படத்தை தொடர்ந்து தமிழ் படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்காததால் தெலுங்கு திரையுலகின் பக்கம் ஒதுங்கினார்.
தெலுங்கில் இவர் நடித்த திரைப்படங்கள் வரிசையாக ஹிட் படங்களாக அமைந்ததால், முன்னணி நடிகை என்கிற இடத்தை பிடித்தார். பின் தமிழ் திரையுலகில் தலைக்காட்டிய இவருக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது. எனவே தமிழிலும் கைவசம் அரை டஜன் படங்களை வைத்துள்ளார்.
இந்நிலையில் இவர் பிரபல தெலுங்கு நடிகர், சாய் தரம் தேஜ்யை காதலிப்பதாக கிசுகிசுப்பட்டது. இவர்கள் இருவரும் இணைந்து இதுவரை "சுப்ரமண்யம் ஃபார் சேல்", "பிள்ள நூவு லெனி ஜீவிதம்' , 'நக்ஷத்திரம்' உள்ளிட்ட படங்களில் ஜோடியாக நடித்துள்ளனர்.
ஆரம்பத்தில் நண்பர்களாக பழகிய இவர்கள் தற்போது காதலித்து வருவதாக ஒரு செய்தி வைரலாக பரவியது. ஆனால் ரெஜினா இந்த செய்தியை முற்றிலும் மறுத்துள்ளார். இது முற்றிலும் வதந்தி என கூறியுள்ள ரெஜினா... தற்போது தன்னுடைய வேலையை மட்டுமே காதலித்து வருவதாகவும், வருங்காலத்தில் யாரையாவது காதலித்தாலும் அதனை வெளிப்படையாக கூறுவேன் என கூறி வதந்திக்கு முற்று புள்ளி வைத்துள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.