
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக உள்ள ரஜினி , கமல், அஜித், விஜய் உள்ளிட்டோருக்கு கிடைக்காத வாய்ப்பு, நடிகர் ஜெய்க்கு இரண்டு முறை கிடைத்துள்ளது.
அதாவது ஜெய், இரண்டாவது முறையாக நடிகை சன்னி லியோனுடன் இணைந்து நடித்துள்ளார்.
'சுப்ரமணிய புரம்', 'நவீன சரஸ்வதி சபதம்', 'கலகலப்பு' என பல படங்களில் ஹீரோவாக நடித்துள்ளவர் நடிகர் ஜெய். இவர் நடித்த 'வடகறி' படத்தில் ஏற்கனவே சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார்.
இதை தொடர்ந்து ஜெய், தற்போது நடிகர் மம்மூட்டியுடன் நடித்து வரும் 'மதுரராஜா' படத்திலும் சன்னி லியோன் ஒரு பாடலுக்கு நடனமாடி உள்ளார். சமீபத்தில் இந்த பாடல் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சியில் ஜெய் இரண்டாவது முறையாக சன்னி லியோனுடன் சேர்ந்து நடனமாடியுள்ளார்.
பாலிவுட் திரையுலகத்தில் தற்போது முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் சன்னி லியோன், கால்ஷீட் கிடைக்க வேண்டும் என பலர் தொடர்ந்து அவரை சந்தித்து கதை சொல்லி வரும் நிலையில், தமிழ் திரையுலகில் உள்ள முன்னணி நடிகர்களுக்கு கூட கிடைக்காத வாய்ப்பு ஜெய்க்கு இரண்டு முறை கிடைத்துள்ளது அதிர்ஷ்டமாகவே பார்க்கப்படுகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.