தயாரிப்பாளரிடம் 40 லட்சம் ஆட்டயப் போட்ட தியேட்டர் தம்பதி...

Published : Apr 09, 2019, 12:37 PM IST
தயாரிப்பாளரிடம் 40 லட்சம் ஆட்டயப் போட்ட தியேட்டர் தம்பதி...

சுருக்கம்

தங்களது தியேட்டரை மறு சீரமைப்பு செய்யப்போவதாகக் கூறி திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவரிடம் 40 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த கணவன்,மனைவி மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.

தங்களது தியேட்டரை மறு சீரமைப்பு செய்யப்போவதாகக் கூறி திரைப்படத்தயாரிப்பாளர் ஒருவரிடம் 40 லட்சம் கடன் வாங்கி மோசடி செய்த கணவன்,மனைவி மீது போலீஸார் புகார் பதிவு செய்துள்ளனர்.

சென்னை திருவெற்றியூர் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர்கள் சுசீலா இவரது கணவர் தவமணி. இவர்கள் தங்களுடைய
தியேட்டர் தொழிலை மேம்படுத்த, ‘ஹர ஹர மஹாதேவி’ திரைப்பட தயாரிப்பாளர் தங்கராஜை பங்குதாரராக இணைத்து கொண்டு படங்கள் வாங்கி வெளியிடும் தொழில் செய்து வந்தார்கள்.

இந்த நிலையில் கடந்த 2016ம் ஆண்டு எம்.எஸ்.எம். தியேட்டரை சீரமைக்க 25 லட்சம் ரூபாயை தயாரிப்பாளர் தங்கராஜிடம் கடனாக கேட்டிருக்கிறார் சுசீலா. இந்த கடனுக்காக ராயபுரத்தில் உள்ள சொத்தை அடமானமாக எழுதி கொடுத்திருக்கிறார்கள். இந்த தொகையை தனது வங்கியில் இருந்து தங்கராஜ் காசோலை மூலம் சுசீலாவுக்கு வழங்கி இருக்கிறார்.

கடன் வாங்கிய சில மாதங்களில் கணவன் மனைவியான சுசீலா-தவமணி தம்பதியின் வரவு செலவு கணக்குகளில் தவறு இருப்பது தெரிந்ததும் அவர்களோடு இணைந்து செய்து வந்த தொழிலில் இருந்து தங்கராஜ் விலகியிருக்கிறார். அதன் பின் ஏற்கனவே சொத்தை அடமானம் வைத்து வாங்கி சென்ற கடனை திருப்பி செலுத்தாமல் சுசீலா தவமணி தம்பதி ஏமாற்றி வந்திருக்கிறார்கள். வாங்கி கடனுக்கு வட்டியும் உயர இப்போது அந்த தொகை 40 லட்சமாக உயர்ந்துள்ளது.

இந்த சூழலில் ராயபுரத்தில் உள்ள அடமான சொத்தை வேறு நபர்களுக்கு விற்பனை செய்ய எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி முயற்சியில் இறங்கியது தெரிந்ததும் அதிர்ச்சி அடைந்த தயாரிப்பாளர் தங்கராஜ் தான் மோசடி செய்யப்படுகிறோம் என உணர்ந்து உடனடியாக திருவெற்றியூர் போலீசில் எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது மோசடி புகார் கொடுத்தார்.

இந்த புகாரை விசாரணை செய்தபின் மோசடி புகாரில் உண்மை இருப்பது தெரிந்ததும் திருவெற்றியூர்எம்.எஸ்.எம். தியேட்டர் உரிமையாளர் சுசீலா-தவமணி தம்பதி மீது 40 லட்சம் மோசடி செய்ததற்காக வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கை எஃப்.ஐ.ஆர். பதிவு செய்யப்பட்டுள்ளது. ஒரு தியேட்டர் அதிபர் அதிலும் ஒரு பெண் தன் கணவரோடு இணைந்து மோசடியில் ஈடுபட்டது திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வாழ்க்கையில் ஒரேயொரு பொய் சொன்னதற்காக வருத்தப்படும் கோமதி: உண்மையின் அடையாளம்!
5000 ரூபாயுடன் சினிமாவுக்கு வந்தவர்! 5 நிமிடத்திற்கு 3 கோடி வாங்கும் நடிகை யார்?