அந்த நிகழ்ச்சியில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்! பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகை ராணி!

Published : Apr 09, 2019, 12:34 PM IST
அந்த நிகழ்ச்சியில் அசிங்கமாக நடந்து கொண்ட நபர்! பகீர் தகவலை வெளியிட்ட சீரியல் நடிகை ராணி!

சுருக்கம்

பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு, ஒரு வாரம் வரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ராணி.  

பல தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிரான்க் நிகழ்ச்சி மூலம் பாதிக்கப்பட்டு, ஒரு வாரம் வரை மருத்துவ மனையில் சிகிச்சை பெற்றதாக கூறியுள்ளார் பிரபல சீரியல் நடிகை ராணி.

தற்போது வெள்ளித்திரை நடிகர் நடிகைகளுக்கு, நிகராக பார்க்கப்படுகின்றனர்,  சின்ன திரை நடிகர்களும். வெள்ளித்திரை நடிகர்களை விட சின்னத்திரை நடிகர்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைப்பதால், வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைக்காத நடிகைகளின் சாய்ஸ் சின்னத்திரையாக தான் உள்ளது.

இப்படி பல சீரியல்களில் தன்னுடைய வில்லத்தனமான நடிப்பு மூலம் ரசிகர்கள் மனதை கவர்ந்தவர் நடிகை ராணி. இவரின் தனித்துவமான நடிப்புக்கு பல ரசிகர்கள் உள்ளனர். 

இவர் சமீபத்தில் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட பிரான்க் நிகழ்ச்சியால் பாதிக்கப்பட்டது குறித்து முதல் முறையாக கூறியுள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், ஒரு முறை ஷூட்டிங் ஸ்பாட்டில், உணவு நேரத்தின் போது ஒருவர் தன்னை ரசிகர் என தன்னிடம் அறிமுக படுத்திக்கொண்டார். பின் ஆட்டோகிராப், மற்றும் புகைப்படம் எடுத்துக்கொள்ள வேண்டும் என என்னிடம் கூறினார். நானும் மறுக்காமல் அவருக்கு ஆட்டோகிராப் போட்டுக்கொடுத்ததோடு புகைப்படமும் எடுத்துக்கொண்டேன். 

திடீர் என என் பக்கத்தில் வந்து தன்னை உரசி அசிங்கமாக நடந்து கொண்டார். நான் கோபமாக என்ன வேண்டும் என கேட்க அவர் நீ தான் வேண்டும் என கூறியதும் அதிர்ச்சியடைந்தேன். பின் தன்னுடைய காதின் அருகில் வந்து கத்தி விட்டு ஓடிவிட்டார். பின்பு தான் தெரிந்தது அது ஒரு பிரான்க் ஷோ என்று.

இந்த நிகழ்ச்சியால் ஏற்பட்ட பாதிப்பு தன்னை மனதளவில் மிகவும் பாதித்தது. இதற்காக ஒரு வாரம் மருத்துவ மனையில் சிகிச்சை எடுத்து திரும்பியதாக முதல் முறையாக பிரான்க் ஷோ பற்றிய தன்னுடைய அனுபவத்தை கூறியுள்ளார். மேலும் இது போன்ற நிகழ்ச்சியை கட்டாயம் தடை செய்ய வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் முடிவை வரவேற்பதாகவும் கூறியுள்ளார்.

PREV
click me!

Recommended Stories

Siragadikka Aasai : மனோஜின் ரகசியம் உடையப்போகுதா? பேரன் வேண்டும் என உருகிய அண்ணாமலை
Siragadikka Aasai : மனோஜுக்கு கோயிலில் காத்திருந்த அதிர்ச்சி... மகனின் களவாணித்தனத்தை கண்டுபிடித்தாரா விஜயா?