தளபதி 63’ ஒரே ஒரு செட்டுக்கு மட்டும் இத்தனை கோடி பட்ஜெட்டா?

Published : Apr 09, 2019, 02:17 PM IST
தளபதி 63’ ஒரே ஒரு செட்டுக்கு மட்டும் இத்தனை கோடி பட்ஜெட்டா?

சுருக்கம்

அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘தளபதி 63’ படத்துக்குப் போடப்பட்டுக்கொண்டிருக்கும் கால்பந்து மைதான செட்டுக்கு மட்டும் ரூ ஐந்து கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.  

அட்லி, விஜய் கூட்டணியில் உருவாகிவரும் ‘தளபதி 63’ படத்துக்குப் போடப்பட்டுக்கொண்டிருக்கும் கால்பந்து மைதான செட்டுக்கு மட்டும் ரூ ஐந்து கோடி பட்ஜெட் ஒதுக்கப்பட்டுள்ளது ஒட்டுமொத்த கோடம்பாக்கத்தையும் திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.

’தளபதி 63’ படத்தின் படப்பிடிப்பு கடந்த ஜனவரி மாதம் தொடங்கி சென்னையில் பல்வேறு இடத்தில் நடைபெற்று வருகிறது.  ஷூட்டிங் தொடங்கி இரண்டு மாதங்களே ஆகியுள்ள நிலையில் பல தடங்கல்களை சந்தித்திருந்தாலும்  இதுவரை  60% படப்பிடிப்பு முடிவுயடைந்துள்ளதாக படப்பிடிப்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் கால்பந்தை மையமாக கொண்டு உருவாகிவரும் இப்படத்தின் அடுத்த கட்ட படப்பிடிப்புக்காக சென்னையில் உள்ள ஈவிபி ஸ்டுடியோவில் பிரமாண்டமாக கால்பந்தாட்ட அரங்கம் தயாராகி வருகிறது. இந்த அரங்கத்துக்கு ஆகப்போகும் பட்ஜெட் தான் இப்போதைக்கு கோடம்பாக்கத்தின் ஹாட் டாபிக். இந்த ஒரு செட்டுக்கு மட்டும் 5 கோடி பட்ஜெட் ஆகும் என்று தயாரிப்பு தரப்புக்கு தகவல் கொடுத்திருக்கிறாராம் படத்தின் ஆர்ட் டைரக்டர் முத்துராஜ். 

பரபரப்பாக நடந்துவரும் செட் பணிகள் முடிந்த பின் தொடர்ந்து 50 நாட்கள் அங்கு தான் படப்பிடிப்பு நடக்கவுள்ளது. இந்த அரங்கம் தயாரிப்புப் பணிகளின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வீட்டுக்குள் நுழைய தடை! ஆனந்தியை விரட்டியடிக்கும் லலிதா - அதிர்ச்சியில் அன்பு! Singapenne Serial Promo Today
ஒரே ஒரு சிரிப்பு.. ஓராயிரம் ஹார்ட்டின்ஸ்!" - இன்டர்நெட் குயீன் மமிதா பைஜுவின் ரகசியம் என்ன?