Rashmika Mandanna: ராஷ்மிகாவை கடித்து விளையாடிய செல்லம்! இது ரொம்ப முரட்டு விளையாட்டா இருக்கே... வைரல் வீடியோ!

Published : Nov 24, 2021, 07:10 PM IST
Rashmika Mandanna: ராஷ்மிகாவை கடித்து விளையாடிய செல்லம்! இது ரொம்ப முரட்டு விளையாட்டா இருக்கே... வைரல் வீடியோ!

சுருக்கம்

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா தன்னுடைய செல்ல நாய்க்குட்டியான அவுராவுடன் முரட்டுத்தனமாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.    

நேஷனல் கிரஷ் ராஷ்மிகா தன்னுடைய செல்ல நாய்க்குட்டியான அவுராவுடன் முரட்டுத்தனமாக விளையாடிய வீடியோ தற்போது வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

குறுகிய நாட்களிலேயே தன்னுடைய அழகாலும், அசத்தலான நடிப்பாலும் ரசிகர்கள் மனதை கவர்ந்த ராஷ்மிகா, தற்போது பாலிவுட் திரையுலகிலும் படு பிசியாக மாறியுள்ளார். அவ்வபோது நேரம் கிடைக்கும் போதெல்லாம், தங்கை மற்றும் சன்னுடைய செல்ல நாய் குட்டியான அவுராவுடன் நேரம் செலவிடுகிறார். இவர்களுக்காகவே போகும் இடமெல்லாம் வீடு வாங்கி கெத்து காட்டி வருகிறார்.

அர்ஜுன் ரெட்டி படத்தின் மூலம் தெலுங்கு ரசிகர்கள் மட்டும் இல்லாது தமிழ் ரசிகர்கள் மனதையும் கவர்ந்தவர் ராஷ்மிகா. தமிழில் நடிகர் கார்த்தி நடிப்பில் இந்த ஆண்டு வெளியான 'சுல்தான்' படத்தில் நடித்திருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவுக்கு வெற்றிபெற வில்லை என்றாலும், இவரை அடுத்தடுத்த படங்களில் நடிக்க வைக்க தமிழ் பட இயக்குனர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். ஆனால் ராஷ்மிகாவுக்கு அடுத்தடுத்து, தெலுங்கு, கன்னடம், மற்றும் இந்தி பட வாய்ப்புகளும் வரிசை கட்டுவதால் மற்ற கால்ஷீட் பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. எனினும் பெரிய நடிகரின் படத்தில் விரைவில் இவரை எதிர்பார்க்கலாம் என்கிறது கோலிவுட் வட்டாரம்.

 மேலும் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனுக்கு ஜோடியாக, ராஷ்மிகா நடித்திருக்கும்... 'புஷ்பா' படம் 5 மொழிகளில் உருவாகி உள்ளது. கிறிஸ்துமஸ் தினத்தை முன்னிட்டு வெளியாக உள்ள இந்த படத்தில், அளவுக்கு அதிகமாகவே கவர்ச்சியை ராஷ்மிகா வாரி இறைத்துள்ளது, இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்கள் மூலம் தெரியவந்தது.

இந்நிலையில் தற்போது கிடைத்துள்ள ஓய்வை தன்னுடைய வீட்டில் செல்ல நாய்குட்டியுடன் செலவிட்டு வரும் ராஷ்மிகா, செல்லமாக தன்னுடைய நாய் குட்டியுடன் விளையாடும் வீடியோ ஒன்றை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். கடித்து விளையாடும் நாய் குட்டியை ராஷ்மிகா செல்லமாக தடுக்கிறார்.இந்த வீடியோவில் குட்டியாக இருந்த அவுரா நன்கு வளர்ந்து விட்டதையும் பார்க்கமுடிகிறது. தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது.

 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

நாக சைதன்யாவை பற்றி அப்போது தெரியாது: அமலா உருக்கம்!
பெத்த மகள் என்று கூட பார்க்காமல் துப்பாக்கியை காட்டி எமோஷனல் பிளாக்மெயில் செய்த சாமுண்டீஸ்வரி!