தனது மகள் குறித்தான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் நலமுடன் இருக்கிறார்கள். இந்த வீடியோக்கள் மற்றும் படங்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.
தென்னிந்திய மொழிகளில் மிக பிரபலமான நடிகைகளில் ஒருவராக இருந்தவர் ரம்பா. தமிழ், தெலுங்கு மலையாளம் உள்ளிட்ட அனைத்து மொழிகளிலும் 90களில் ஒரு ரவுண்டு வந்தவர் இவர்தான். முதன்முதலாக தெலுங்கு படத்தின் மூலம் அறிமுகமான ரம்பா. பல ஆண்டுகள் அங்கேயே தான் பயணித்தார்.
1992 ஆம் ஆண்டு திரைத்துறைக்கு அறிமுகமான இவர் 1993 ஆம் ஆண்டு உழவன் என்னும் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருந்தார். அந்த படத்தில் அழகிய லைலா என மனதை கலக்கி விட்டார் ரம்பா. பின்னர் இவருக்கு தமிழில் ஏகபோக வரவேற்புகள் கிடைக்க வருடத்திற்கு நான்கு ஐந்து படங்களில் ஆவது தோன்றிவிடுவார். பிலிம் ஃபேர் உள்ளிட்ட பல விருதுகளை வென்ற இவர் ஒரு கட்டத்திற்கு மேல் சிறப்பு வேடங்களில் நடிக்க தொடங்கினர். அதோடு பாடல்களிலும் நடிக்க துவங்கி விட்டார் ரம்பா. இறுதியாக கடந்த 2010 ஆம் ஆண்டு பெண் சிங்கம் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்தார்.
மேலும் செய்திகளுக்கு... Raja Rani 2 serial : அப்துலை வெல்ல சபதம் எடுக்கும் சந்தியா...சூழ்ச்சி செய்யும் அர்ச்சனா ..இன்றைய எபிசோட்
இதற்கிடையே டாப் டென் நாயகிகளில் ஒருவராக இருந்த ரம்பா, கடந்த 2010 ஆம் ஆண்டு தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இவர்களது திருமணம் கர்நாடகா மாநிலம் திருமலையில் பிரம்மாண்டமாக நடைபெற்றது. பின்னர் தனது கணவருடன் டோரண்டோவில் குடியேறிவிட்டார். இவர்களுக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளார்.
சமீபத்தில் தனது கணவரை இழந்த மீனாவை காண சென்னை வந்திருந்தார் ரம்பா, இவருடைய புகைப்படங்கள் வைரலானது. அதோடு தனது பிள்ளைகளுடன் இருக்கும் படங்களையும் அவ்வப்போது வெளியிட்டு வாழ்த்துக்களை பெற்று வருகிறார். இதற்கிடையே அவரது பதிவு ஒன்று அனைவரையும் கலங்கடித்தது. அதாவது பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வருகையில் தங்கள் கார் விபத்தில் சிக்கியதாகவும், தானும் தனது மூத்த மகளும் நலமுடன் இருப்பதாகவும் தனது இளைய மகள் மட்டும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் ஷாக்கிங் தகவலை வெளியிட்டு இருந்தார்.
மேலும் செய்திகளுக்கு...baakiyalakshmi : ரேஷன் கார்டால் வந்த வினை..அதிரடி காட்டிய கோபி..எழிலை மிரட்டும் ஈஸ்வரி
இதனால் அவருக்கு பிரபலங்களும் ரசிகர்களும் ஆறுதல் கூறி வந்தனர். தற்போது மருத்துவமனையில் இருந்து மீண்டுள்ள தனது மகள் குறித்தான வீடியோக்களையும் புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார். அதில் நலமுடன் இருக்கிறார்கள். இந்த வீடியோக்கள் மற்றும் படங்களுக்கும் ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகின்றனர்.