நடிகை சன்னி லியோனுடன் படம் நடித்தது குறித்து பிக்பாஸ் ஜிபி முத்து சிலாகித்து கூறியுள்ள தகவல்
டிக் டாக் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ஜிபி முத்து தற்போது நடந்து வரும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் முக்கிய போட்டியாளர்களின் ஒருவராக இருந்த நிலையில், பிள்ளைகள் கூட கொண்ட அன்பால்... பிக்பாஸ் வீட்டில் இருக்க முடியாமல், நிகழ்ச்சியில் இருந்து திடீர் என வெளியேறினார். இந்நிலையில், கோவையில் நடந்த தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க வந்த அவர் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார்.
அப்போது பேசிய அவர், டிக் டாக் மூலம் அறிமுகமாகி ஊடகங்களின் துணையுடன் தற்போது திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் திரைத்துறையில் சிறந்த ஒத்துழைப்பு இருப்பதாகவும் தெரிவித்தார். அதே போல், பிக் பாஸ் அனுபவம் மிகவும் சிறப்பானதாக இருந்ததாகவும் பிக் பாஸ் மூலம் நடிகர் கமல்ஹாசனை சந்தித்தது மிக பெரும் பாக்கியம் எனவும், தனது குழந்தைகளுக்கு உடல்நிலை சரியில்லை என்ற காரணத்தால் பிக் பாஸை விட்டு வெளியேறியதாகவும் கூறினார்.
கார்த்திக் வெளியே தெரிந்த பிளேபாய்.. ராம்கி வெளியே தெரியாத பிளேபாய்! ரகசியத்தை உடைத்த ஆர்கே செல்வமணி
அது ஒரு நல்ல அனுபவம் என்றும் கூறிய இவர் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த பின்னர், ஐந்து திரைப்படங்களில் நடித்து வருவதாகவும் நடிகை சன்னி லியோனுடன் நடித்தது மகிழ்ச்சி எனவும் கூறியதுடன், தான் அவரைப் பார்த்து ஐ லவ் யூ கூறியவுடன் அவர் தன்னை பார்த்து கியூட் என கூறிய போது சிலாகித்து போனதாகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.
குடும்பத்துடன் 68 ஆவது பிறந்தநாள் கொண்டாடிய கமல்..! இன்ப அதிர்ச்சி கொடுத்த சகோதரர் சாருஹாசன்!
சன்னி லியோன் நடித்துள்ள திரைப்படத்தில் நான்கு ஐந்து காட்சிகளில் வருவதாகவும் , சன்னி க்கு தமிழ் தெரியவில்லை என்றும் எது கூறினாலும் டிரன்லேட் பண்ணி கூறினால் தான் புரிவதாகவும் அது மட்டுமே சற்று சிரமமாக இருந்தாகவும் கூறினார் .. கோவையில் யூடியூபர் டிடிஎஃப் வாசன் உடன் அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்றது குறித்த கேள்விக்கு, இதுவரை தான் யாருடனும் அது போன்ற வேகத்தில் சென்றதில்லை எனவும் இந்த சம்பவத்திற்கு பிறகு இனிமேல் யாருடனும் செல்ல மாட்டேன் எனவும் அவருக்கே உரிய தோனியில் கூறினார்...