
சாஹோ, பாகி 3 ஆகிய சூப்பர் ஹிட் படங்களில் நடித்தவர் ஷ்ரத்தா கபூர். பாலிவுட்டில் 700 படங்களுக்கு மேல் நடித்த பிரபல வில்லன் நடிகர் சக்தி கபூர் மகள் ஆவார். பாலிவுட்டில் முன்னணி இளம் நடிகையாக வலம் வரும் ஷ்ரத்தா கபூர், தெலுங்கிலும் கவனம் செலுத்தி வருகிறார். 2010ஆம் ஆண்டு வெளியான டீன் பாட்டி படத்தில் அறிமுகமாகியிருந்தாலும், 2013ஆம் ஆண்டு வெளியான ஆஷிக்-2 படம் அவருக்கு பேசும் படியாக அமைந்தது.
பாலிவுட் இளம் ஹீரோக்களே தங்களது படத்தில் ஷ்ரத்தா கபூர் நடிக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கும் அளவிற்கு முன்னேறியுள்ளார். சோசியல் மீடியாவில் ஆக்டிவாக வலம் வரும் ஷ்ரத்தா, தனது ஹாட் கிளிக்ஸை தட்டிவிட்டு, அவ்வப்போது ரசிகர்களை திக்குமுக்காட வைக்கிறார். இந்நிலையில் பிரபல புகைப்பட கலைஞரான ரோகன் ஸ்ரேஷ்தாவவிற்கும் ஷ்ரத்தா கபூருக்கும் இடையே காதல் என்று பாலிவுட் வட்டாரங்களில் பேசப்படுகிறது.
தற்போது மும்பையில் கொரோனா லாக்டவுனில் இருந்து தளர்வு அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் காதலர் ரோகனுடன் சேர்ந்து ஷ்ரத்தா இருசக்கர வாகனத்தில் ஊர் சுற்றும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. கறுப்பு நிற டி-ஷர்ட், டிராக் உடன் மாஸ்க் அணிந்த படி காதலருடன் நெருக்கமாக அமர்ந்து கொண்டு பைக்கில் ஊர் சுற்றுகிறார். இருவரும் நெருக்கமாக பைக்கில் ஒட்டி, உரசிக்கொண்டு செல்லும் வீடியோ சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இதோ....
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.