காப்பகத்தில் உள்ள 42 குழந்தைகளுக்கு கொரோனா..! மனவேதனையோடு ராகவா லாரன்ஸ் வெளியிட்ட பகீர் தகவல்!

By manimegalai aFirst Published Jun 12, 2020, 6:56 PM IST
Highlights

மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மற்ற மாநிலங்களை விட சென்னையில் தான் கொரோனா பாதிப்பு அதிக அளவில் உள்ளது. எனவே, இதனை கட்டுப்படுத்தும் வகையில் எந்த ஒரு தளர்வுகளும் இல்லாத முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கையின் காரணமாக விரைவில், சென்னை மற்றும் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பாதிப்படுபவர்கள் எண்ணிக்கை குறையும் என சுகாதார துறை அதிகாரிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

மேலும் செய்திகள்: சவாலை ஏற்று கொண்ட நடிகர் பிரபாஸ்..! சிறப்பாக செய்த சம்பவம்... குவியும் ரசிகர்கள் வாழ்த்து...!
 

இந்நிலையில், கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்ட பலருக்கு  உயர்ந்த மனதுடன், செலவழித்து வரும் நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ். தற்போது வரை ஊரடங்கு காரணமாக பாதிக்கப்பட்ட பலருக்கு தன்னுடைய குழுவினருடன்  உதவிகளை செய்து வருகிறார்.

மேலும் இவருடைய ஆஸ்ரமத்தில் இருந்த குழந்தைகள் மற்றும் பணியாளர்கள் உட்பட 9 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, சமீபத்தில் அவர்கள் குணமடைந்த விஷயத்தை மிகவும் மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். இதனை சாத்தியமாக்கிய, மருத்துவர்கள், சுகாதார துறை அதிகாரிகள் உட்பட அனைவருக்கும் மனம் உருகி நன்றி தெரிவித்திருந்தார்.

மேலும் செய்திகள்: உடலில் ஒட்டு துணி இன்றி... பால், ரோஜாப்பூ நிரப்பட்ட பாத் டப்பில் ஹாட் குளியல் போட்ட ஊர்வசி ரவுத்தேலா!
 

இதை தொடர்ந்து தற்போது இவர் வெளியிட்டுள்ள ஒரு தகவல் மேலும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ராயபுரம் பகுதியில் உள்ள அரசு குழந்தைகள் காப்பகத்தில் 42 குழந்தைகளுக்கு கொரோனா பாசிட்டிவ் என உறுதி செய்யப்பட்டுள்ளதாக நடிகர் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார். 

இந்த செய்தியை கேட்டதிலிருந்து தான் மிகவும் மனவேதனையுடன் இருப்பதாகவும் அந்த காப்பகங்களில் உள்ள ஒவ்வொரு குழந்தையையும் தனது குழந்தை போல் எண்ணி வருத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்துள்ளார். 

மேலும் செய்திகள்: பிரமாண்டமாய் இருக்கும் நடிகை குஷ்பு வீடு..! இவ்வளவு ஆடம்பரமா? வாங்க சுற்றி பார்க்கலாம்!
 

மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட அந்த குழந்தைகளுக்கு சத்து நிறைந்த உணவு தேவை, தன்னால் முடிந்த உதவியை மாவட்ட குழந்தைகள் காப்பக அதிகாரி சூரியகலா அவர்கள் மூலம் செய்து வருவதாகவும்,  இதே போல் மற்றவர்களும் அந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். எனவே நல்ல உள்ளம் படைத்த பலர் விரைவில் இந்த குழந்தைகளுக்கு உதவி செய்ய முன் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

On this Thursday I pray ragavendra swamy for the recovery of corona affected boys from government children home 🙏 pic.twitter.com/pCYc5aXxZr

— Raghava Lawrence (@offl_Lawrence)

click me!