இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம் என குறிப்பிட்டுள்ளனர்.
கடந்த 2004 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான எங்கள் அண்ணா படத்தின் மூலம் திரை உலகிற்கு அறிமுகமானவர் நமீதா. விஜயகாந்த், பிரபுதேவா மற்றும் சௌந்தர்யா உடன் இணைந்து இவர் அறிமுகமானார். பின்னர் விஜய், சத்யராஜ், அர்ஜுன், பார்த்திபன், சுந்தர் சி, சரத்குமார் என முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்திருந்தார் நமீதா.
ஆனாலும் நாயகியாகும் முயற்சியை தவிர்த்து விட்டு கவர்ச்சி கன்னியாக ரசிகர்களின் மனதில் நின்று விட்ட நமீதா தொடர்ந்து பிரபல ரியாலிட்டி ஷோவான மானாட மயிலாட நிகழ்ச்சியில் நடுவராக இருந்தார். மேலும் விஜய் டிவியில் பிரபலமாக ஓடிக்கொண்டிருந்த பிக் பாஸ் தமிழ் ஒன்று போட்டியாளர்களின் ஒருவராக காணப்பட்டார்.
மேலும் செய்திகளுக்கு...ஆதித்ய கரிகாலன் விக்ரம் மிரட்டும் சோழா சோழா.. பொன்னியின் செல்வன் செகண்ட் சிங்கிள் லான்ச் லைவ்
இதற்கிடையே 2017 ஆம் ஆண்டில் நமீதா தனது வாழ்க்கை நீண்ட நாள் காதலரான வீரேந்திர சவுத்ரியை திருப்பதியில் திருமணம் செய்து கொண்டார். இதையடுத்து தனது பிறந்த நாளில் தான் கர்ப்பம் தரித்தது குறித்து பகிர்ந்திருந்தார். பின்னர் கர்ப்பகால புகைப்படங்களையும் விதவிதமாக எடுத்து ரசிகர்களின் வாழ்த்துக்களை பெற்று வந்தார் நமீதா.
சமீபத்தில் தனது வளைகாப்பு வீடியோவையும் இன்ஸ்டால் பதிவிட்டார். இவரது வளைகாப்பில் குடும்பத்தினர் மற்றும் கணவர் மகிழ்ச்சியுடன் காணப்பட்டனர்.
மேலும் செய்திகளுக்கு...செகண்ட் சிங்குளுக்கு ரெடியான பொன்னியின் செல்வன்..ஹைதராபாத் விஜயம் செய்த நாயகர்கள்
இந்நிலையில் தான் இரட்டைக் குழந்தைகளை பெற்றெடுத்ததை சமூக வலைதளம் மூலம் அறிவித்துள்ளார். இரட்டைக் குழந்தைகளுடன் காணப்படும் தம்பதிகள் அந்த வீடியோவுடன் 'இந்த நல்ல சந்தர்ப்பத்தில் எங்கள் மகிழ்ச்சியான செய்தியை உங்கள் அனைவரிடமும் பகிர்ந்து கொள்வதில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைகிறோம். நாங்கள் இரட்டை ஆண் குழந்தைகளை பெற்றெடுத்துள்ளோம். உங்கள் ஆசைகளும் அன்பும் அவர்களுக்கு என்றும் இருக்கும் என்று நம்புகிறேன் எனக் குறிப்பிட்டுள்ளனர். அதோ டு அவர்களுக்கு சிறந்த சுகாதார பராமரிப்பு மற்றும் சேவைகளுக்கு நாங்கள் உண்மையிலேயே நன்றியுள்ளவராக இருப்போம் என மருத்துவ குழுவிற்கும் நன்றி தெரிவித்துள்ளனர்.
மேலும் செய்திகளுக்கு...வர வர உடையை குறைக்கும் பிரியா பவானி..வெளிநாட்டில் ஹாட் பரப்பும் நாயகி