
நேற்றைய தினம் கேரளாவில் தலைமறைவாகி இருந்த மீரா மிதுனை தமிழ்நாடு போலீசார் கைது செய்த நிலையில், இவரிடம் சுமார் 2 மணிநேரத்திற்கு மேல் விசாரணை நடத்திய போலீசார் தற்போது சைதாபேட்டை மாஜிஸ்திரேட் முன் ஆஜர் படுத்தப்பட்டார்.
பட்டியலின சமூகத்தினரையும் மற்றும் அச்சமூகத்தை சார்ந்த திரைப்பட இயக்குனர்களையும் மிகவும் இழிவாகவும், தரக்குறைவாகவும், பேசிய வீடியோ நடிகை மீரா மிதுன் வீடியோ வெளியிட்ட விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததால் இவரை போலீசார் கைது செய்ய வேண்டும் என பலர் சமூக வலைத்தளம் மூலமாகவும், நேரடியாக போலீசில் புகாரும் கொடுத்தனர்.
அந்த வகையில், டுதலை சிறுத்தைகள் கட்சி வன்னி அரசு கொடுத்த புகாரின் பேரில் மீரா மிதுன் மீது மத்திய குற்றப்பிரிவு போலீசார் 7 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இதுகுறித்து சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பிய நிலையில், அவர் போலீசில் ஆஜராகாமல் மீண்டும் தன்னுடைய திமிர் பேச்சை அவிழ்த்து விட்டு வீடியோ வெளியிட்டு காந்தத்தினார். இவரை கைது செய்ய தீவிரமாக போலீசார் தேடி வந்தனர்.
இந்நிலையில், நேற்று கேரளாவில் தலைமறைவாக இருந்த மீரா மிதுனை கைது செய்த போலீசார், அவரை இன்று காலை சென்னை கொண்டு வந்தனர். சுமார் இரண்டு மணிநேரம் இவரிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில், தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே வாக்குமூலம் கொடுப்பேன் என பிரச்சனை செய்து வந்தார். பின்னர் சற்று முன் மீரா மிதுன் சைதாப்பேட்டை மாஜிஸ்திரேட் முன்னர் ஆஜர் படுத்தப்பட்டுள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.