
பட்டியலின மக்கள் மற்றும் இயக்குனர்கள் குறித்து அவதூறாக பேசி வீடியோ வெளியிட்ட குற்றத்திற்காக, கேரளாவில் தலைமறைவாக இருந்த நடிகை மீரா மிதுனை நேற்று கைது செய்த தமிழக போலீசார், சற்று முன்னணி மீரா மிதுனுக்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவரது பாய் ஃபிரென்ட் அபிஷேக் ஷாம்மை கைது செய்துள்ளனர்.
மீரா மிதுன் எது செய்தாலும், அவர் செய்வது தவறு என்பதை சுட்டி காட்டாமல் அவருக்கு உறுதுணையாக இருந்து, அவர் வெளியிடும் வீடியோக்களை படம் பிடித்து கொடுத்த குற்றத்திற்காக தான் தற்போது அபிஷேக் ஷாம் கைது செய்யப்பட்டுள்ளார். மீரா மிதுன் பேசி வெளியிட்டு மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய 'பட்டியல் இன மக்கள்' குறித்த அவதூறு வீடியோவை இவர் தான் படம்பிடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எனவே தற்போது இவரையும் சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர். அபிஷேக் ஷாம் ஏற்கனவே, மீரா மிதுனுடன் வெளியிட்டு வரும் முத்த வீடியோ, ரொமான்ஸ் வீடியோ, மற்றும் டான்ஸ் வீடியோக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியது மூலம் பல்வேறு விமர்சனங்களை தொடர்ந்து சந்தித்து வந்தார். அதே போல் தன்னை விட வயதில் மிகவும் சிரியவரான, அபிஷேக்குடன் மீரா மிதுன் செய்த அட்ராசிட்டியும் கொஞ்சம் நஞ்சம் இல்லை.
இந்நிலையில் நேற்று கேரளாவில் கைது செய்யப்பட்ட, மீரா மிதுனிடம், தாற்போது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் மீரா மிதுன் போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தராமல் தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே போலீசாரின் கேள்விக்கு பதில் கூறுவேன் என அடம் பிடித்து வருகிறார். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், இதை தொடர்ந்து இவருக்கு உடந்தையாக இருந்த காரணத்திற்காக இவரது ஆண் நண்பர் கைது செய்யப்பட்டுள்ளார்.
....................
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.