விசாணைக்கு ஒத்துழைப்பு தராமல் அடம் பிடிக்கும் மீரா மிதுன்! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!

Published : Aug 15, 2021, 12:29 PM IST
விசாணைக்கு ஒத்துழைப்பு தராமல் அடம் பிடிக்கும் மீரா மிதுன்! என்ன காரணம்? வெளியான பரபரப்பு தகவல்..!

சுருக்கம்

சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வாக்குமூலம் கொடுக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அடுக்கடுக்காக பல பிரச்சனைகளில் வாயை விட்டு சிக்கி வரும் மீரா மிதுன், பட்டியல் இன மக்கள் மற்றும் இயக்குனர்கள் பற்றி பேசிய சம்பவம் தமிழகத்தில் மிகப்பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தியது. பல முறை கைது செய்யப்படுவதில்லை இருந்து தப்பித்த மீரா மிதுனை இம்முறை கைது செய்ய வேண்டும் என, கண்டனங்கள் எழுந்ததால்... நேற்று கேரளாவில் தலை மறைவாக இருந்த மீரா மிதுனை சைபர் கிரைம் போலீசார் கைது செய்தனர்.

போலீசார் தன்னை கைது செய்ய வந்ததை அறிந்து, அழுது ஆர்ப்பாட்டம் செய்து, கத்தி கூச்சல் போட்ட மீரா மிதுன் வீடியோ ஒன்றும் நேற்று வெளியாகிய நிலையில், நெட்டிசன்கள் பலரும் அவரை கைது செய்தே தீரவேண்டும் என கூறி வந்தனர். பல ஆர்ப்பாட்டங்களை அடுத்து மீரா மிதுனை தமிழக போலீசார் கைது செய்து இன்று சென்னைக்கு அழைத்து வந்தனர்.

தற்போது மீரா மிதுனிடம், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் உள்ள சென்னை மத்திய குற்றப்பிரிவில் வைத்து போலீசார் மீரா மிதுனிடம் விசாரணை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியானது. ஆனால் அவர் வாக்குமூலம் கொடுக்க தொடர்ந்து மறுப்பு தெரிவித்து, போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தர மறுப்பதாக தற்போது பரபரப்பு தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

மேலும் தன்னுடைய வழக்கறிஞர் வந்தால் மட்டுமே போலீசாரின் கேள்விக்கு பதில் கூறுவேன் என அடம் பிடித்து வருகிறாராம். இந்த சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

5 பேருடன் அட்ஜஸ்ட் செய்தால் பிரபல நடிகருக்கு மனைவியாக நடிக்கும் வாய்ப்பு: மிர்ச்சி மாதவி ஷாக் பதிவு!
ஜன நாயகன் 2ஆவது சிங்கிள் எப்போது? இதோ வந்துருச்சுல அப்டேட்!