தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்..! முதலமைச்சர் அதிரடி..!

Published : Aug 15, 2021, 01:43 PM IST
தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தில் புதிய தலைவராக வாகை சந்திரசேகர் நியமனம்..! முதலமைச்சர் அதிரடி..!

சுருக்கம்

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகரை நியமனம் செய்துள்ளார் தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.  

தமிழ்நாடு இயல், இசை, நாடக மன்றத்தின் புதிய தலைவராக பிரபல நடிகரும், முன்னாள் எம்.எல்.ஏ-வுமான வாகை சந்திரசேகரை நியமனம் செய்துள்ளார் தமிழ முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

சுமார் 40 ஆண்டுகளாக திரையுலகில் முன்னணி நடிகராகவும், அரசியல்வாதியாகவும், அறியப்படும் வாகை சந்திரசேகரை இயல், இசை, நாடக, மன்றத்தின் தலைவராக தற்போது முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளதை தொடர்ந்து இவருக்கு பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகிறார்கள்.

திரையுலகில் சுமார் 300 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ள வாகை சந்திரசேகர், 80 மற்றும் 90களில் ரசிகர்களின் மனதை கவரும் விதமான கதாபாத்திரத்தை தேர்வு செய்து நடித்து பிரபலமானவர். மேலும் கடந்த 2003 ஆம் ஆண்டு வெளியான 'நண்பா நண்பா' என்கிற திரைப்படத்தில் நடித்ததற்காக சிறந்த துணை நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுள்ளார். கலைமாமணி விருது உள்ளிட்ட பல்வேறு விருதுகளுக்கு சொந்தக்காரர்.

கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் 2021 வரை வேளச்சேரி தொகுதி திமுக சட்டமன்ற உறுப்பினராகவும் இருந்தார். தாற்போது இயல், இசை, நாடக மன்ற தலைவராக இருக்கும் இசையமைப்பாளர் தேவாவின் பதவிக்காலம் முடிவடைய உள்ள நிலையில், இவருக்கு பதில் வாகை சந்திரசேகரை புதிய தலைவராக நியமனம் செய்துள்ளார் முதல்வர் ஸ்டாலின்.  இவர் தமிழ்நாடு நாட்டுப்புறக் கலைஞர்கள் நல வாரியத்தின் தலைவர் பொறுப்பையும் வகிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

வரதட்சணை கேட்டு மகளை கொடுமைப்படுத்துறீங்க: போலீசில் சொல்லி உண்டு இல்லனு பண்ணிடுவேன்: பாக்கியம் ரிவெஞ்ச்!
அகண்டா 2' - எப்போது ஓடிடியில் ரிலீஸ்? எந்த ஓடிடி தளத்தில் பார்க்கலாம்? ரசிகர்களுக்கு விருந்து!