Breaking: நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்..!

Published : Aug 06, 2022, 03:54 PM ISTUpdated : Aug 06, 2022, 03:55 PM IST
Breaking: நடிகை மீரா மிதுனுக்கு மீண்டும் பிடிவாரண்ட்..!

சுருக்கம்

நடிகை மீரா மிதுன் பட்டியலினத்தவர் குறித்து பேசிய வழக்கில் மீண்டும் பிடிவாரண்ட் போடப்பட்டுள்ளது.  

தமிழி சினிமாவில் முன்னணி ஹீரோயின் ரேஞ்சிக்கு சீன் போட்டாலும், 8 தோட்டாக்கள், தானா சேர்ந்த கூட்டம் உள்ளிட்ட சில படங்களில் குணசித்ர வேடத்தில் மட்டுமே நடித்துள்ளவர் மீரா மிதுன்.  விஜய் டிவியில் ஒளிபரப்பான, ஜோடி நம்பர் 1 மற்றும் பிக்பாஸ் ஆகிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டு விளையாடினார். ஓரளவுக்கு ரசிகர்கள் மத்தியில் இவருக்கு வரவேற்பு கிடைத்தாலும், சேரன் குறித்து இவர் கிளப்பிய பிரச்சனை இவருக்கு வாக்குகள் குறைந்து, மீரா மிதுன் வெளியேறவும் காரணமாக அமைந்தது.

மேலும் செய்திகள்: தற்கொலைக்கு முயன்ற தீபிகா படுகோன்.. ஏன்? அவரே கூறிய அதிர்ச்சி தகவல்!

இந்நிலயில் இவர் பட்டியலினத்தவர் குறித்து அவதூறாக பேசி சமூக வலைத்தளத்தில் வெளியிட்ட வீடியோ மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், ஒன்றை  வெளியிட்டார். விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் இவர் மீது கொடுத்த புகாரின் அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டம், கலகத்தை தூண்டுதல் உள்ளிட்ட  7 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கைது செய்யப்பட்டார்.

மேலும் செய்திகள்: கடல் நீரில் சொட்ட சொட்ட நனைந்து... கவர்ச்சியில் விளையாடிய சுனைனா! ஹார்ட் டச்சிங் ஹாட் போட்டோஸ்!

இந்த வழக்கில் மீரா மிதுனுக்கு நிபந்தனை ஜாமீன் கிடைத்த போதும், பட்டியலின மக்களை அவதூறாக பேசிய வழக்கில அவ்வப்போது, விசாரணைக்கு ஆஜர் ஆக வேண்டும் என கூறப்பட்டிருந்தது. இந்நிலையில், இவர் சாட்சி விசாரணைக்கு பல முறை நோட்டீஸ் அனுப்பியும் ஆஜர் ஆகாததால், தற்போது 2 ஆவது முறையாக மீரா மிதுனுக்கும் அவரது வழங்கறிஞருக்கும் இரண்டாவது முறையாக பிடி வாரண்ட் போடப்பட்டுள்ளது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

ஓவர் பில்டப்போடு வந்து புஸ்ஸுனு முடிந்த புதுச்சேரி மாநாடு..! விஜய் பேசியது என்ன? தளபதியின் முழு ஸ்பீச் இதோ
தென்னிந்தியாவில் வசூல் ராஜா யார்? 2025ல் பாக்ஸ் ஆபிஸை அதிரவிட்ட டாப் 10 மூவீஸ் ஒரு பார்வை