
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வரும் தனுஷ், டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என பல்வேறு திரையுலகில் பட்டாசாய் ஜொலித்து வருகிறார். அண்மையில், இவர் நடிப்பில் வெளியான படம் தி கிரே மேன். இப்படத்தில் நடிகர் தனுஷ் அவிக் சான் என்கிற மாஸான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இப்படம் கடந்த ஜூலை 22-ந் தேதி ரிலீசானது.
நெட்பிளிக்ஸ் நிறுவனம் தயாரித்திருந்த இப்படத்தை அவெஞ்சர்ஸ் பட இயக்குனர்களான ரூஸோ சகோதரர்கள் இயக்கி இருந்தனர். இப்படத்தில் தனுஷுடன் கிரிஸ் எவான்ஸ், ரியான் காஸ்லின், அன்னா டி அர்மாஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். வெளியானது முதல் இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது.
இதையும் படியுங்கள்... லுங்கியோட வந்தா டிக்கெட் தர மாட்டோம்.... அடாவடி செய்த தியேட்டர்காரர்கள் - பதிலுக்கு ரசிகர் செய்த தரமான சம்பவம்
இப்படத்திற்கு கிடைத்து வரும் வரவேற்பை அடுத்து, இதன் இரண்டாம் பாகம் உருவாக உள்ளதை கடந்த சில தினங்களுக்கு முன்னர் ரூஸோ சகோதரர்கள் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். மேலும் இது மார்க் கிரீனி எழுதிய நாவலை மையமாக வைத்து எடுக்கப்பட உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.
இந்நிலையில், தி கிரே மேன் படத்தின் 2-ம் பாகத்தில் தானும் நடிக்க உள்ளதை நடிகர் தனுஷ் உறுதி செய்துள்ளார். இதைப்பார்த்து உற்சாகம் அடைந்த ரசிகர்கள் நடிகர் தனுஷுக்கு ஒரே ஒரு கோரிக்கை மட்டும் வைத்து வருகின்றனர். முதல் பாகத்தைப் போல் 5 நிமிடம் மட்டும் வந்து செல்லாமல் படம் முழுக்க வரும்படி வேண்டுகோள் விடுத்துள்ளனர். ரசிகர்களின் ஆசையை தனுஷ் நிறைவேற்றுவாரா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
இதையும் படியுங்கள்... களத்திலேயே துடிதுடித்து இறந்த கபடி வீரர் விமல்ராஜ்! குடும்பத்தாரிடம் 10 லட்சம் நிதியுதவி வழங்கினார் RK சுரேஷ்
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.