அசுரன் பச்சையம்மாவா இது?... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...!

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : May 27, 2020, 12:22 PM IST
அசுரன் பச்சையம்மாவா இது?... ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறுபட்ட தோற்றம்... வைரலாகும் போஸ்டர்...!

சுருக்கம்

போஸ்டரில் இருப்பது மஞ்சு வாரியர் தானா என உத்து பார்க்க வேண்டிய அளவிற்கு ஆளே முற்றிலும் மாறியுள்ளார். 

லேடி சூப்பர் ஸ்டார் ஆஃப் மலையாளம் சினிமா என்ற பெருமைக்கு சொந்தமானவர் மஞ்சு வாரியர். தனது அபார நடன திறமையின் மூலம் 1995ம் ஆண்டு சாக்ஷ்யம் என்ற மலையாள திரைப்படம் மூலம் திரைத்துறையில் அறிமுகமானார். கடந்த ஆண்டு பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்த லூசிபர் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து மலையாள ரசிகர்களின் மனம் கவர்ந்தார். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் உள்ள கேரக்டர்களை தேர்வு செய்து நடித்து வரும் மஞ்சு வாரியர் கடந்த ஆண்டு அசுரன் படம் மூலம் தமிழுக்கு அறிமுகமானார். 

இதையும் படிங்க:“கமலுக்கும், எனக்கும் என்ன உறவு”... முதன் முறையாக மனம் திறந்த பூஜா குமார்...!

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ், மஞ்சு வாரியர், பசுபதி உள்ளிட்டோர் நடித்த அசுரன் திரைப்படம் வசூல் மற்றும் விமர்சன ரீதியாக பல சாதனைகளை படைத்தது. இந்தி, தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளிலும் அசுரன் படத்தை ரீமேக் செய்ய முன்னணி நடிகர் போட்டா போட்டி போட்டனர். தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் அசுரன் திரைப்படம் தயாராகி வருகிறது. அசுரன் படத்தில் மஞ்சு வாரியர் நடித்த பச்சையம்மாள் கேரக்டர் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் தெலுங்கில் கூட ஹீரோயினை தேர்வு செய்வதற்கு நீண்ட காலம் எடுத்துக்கொள்ளப்பட்டது. தற்போது அந்த கதாபாத்திரத்தில் ப்ரியாமணி நடிக்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதையும் படிங்க: நயன்தாரா நம்பர் ஒன் நடிகையாக நீடிக்க காரணம் இதுதான்?... உண்மையை போட்டுடைத்த பிரபல நடிகர்...!

தற்போது மஞ்சு வாரியர் மலையாளத்தில் காயாட்டம் என்ற படத்தில் நடித்து வந்தார். கொரோனா லாக்டவுன் காரணமாக படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டுள்ள போதும், போஸ்ட் புரோடக்‌ஷன் வேலைகளுக்கு அனுமதி கொடுக்கப்பட்டுள்ளது. இடையே பல தயாரிப்பு நிறுவனங்களும் தங்களது படத்திற்கான புரோமோஷன் வேலைகளில் இறங்கியுள்ளனர். இந்நிலையில் மஞ்சு வாரியர் நடிப்பில் உருவாகி வரும் காயாட்டம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. 

இதையும் படிங்க: ஆன்லைனில் நயன்தாரா படமா?... லேடி சூப்பர் ஸ்டாரை குறைச்சி மதிப்பிட்டீங்க பாஸ்...!

போஸ்டரில் இருப்பது மஞ்சு வாரியர் தானா என உத்து பார்க்க வேண்டிய அளவிற்கு ஆளே முற்றிலும் மாறியுள்ளார். கலரிங் செய்யப்பட்ட தலைமுடி, மார்டன் டிரஸ், ஸ்டைலாக கூலிங் கிளாஸ் என வேற லெவலில் இருக்கிறார் மஞ்சு வாரியர். காயாட்டம் படத்தில் நாடு முழுவதும் சுற்றித் திரிவது போன்ற கேரக்டர் என்பதால் மஞ்சு வாரியர் இப்படி மாறுபட்ட தோற்றத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. ரம்ஜான் விருந்தாக வெளியான இந்த போஸ்டர் சோசியல் மீடியாவில் தீயாய் பரவி வருகிறது.

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

ஐட்டம் டான்ஸுக்காகவே ஆட்டநாயகியை தேடிப் பிடிக்கும் நெல்சன்: ஜெயிலர் 2, ரஜினி ஃபீலிங்க்ஸ் நிறைவேறுமா?
சாப்பாட்டுக்காகவே போகிறோம்; கல்யாண வீட்டில் ஏன் கரண் ஜோஹர் சாப்பிடுவதில்லை? காரணம் என்ன?