ஆஹா என்ன அழகு...!! குச்சிப்புடி நடனத்தில் கலக்கும் லட்சுமி மேனன்... வைரல் வீடியோ இதோ...

Kanimozhi Pannerselvam   | Asianet News
Published : Sep 11, 2020, 09:35 PM IST
ஆஹா என்ன அழகு...!! குச்சிப்புடி நடனத்தில் கலக்கும் லட்சுமி மேனன்... வைரல் வீடியோ இதோ...

சுருக்கம்

தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி வரும் லட்சுமி மேனன், சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். 

இயக்குனர் எஸ்.ஆர்.பிரபாகரன் இயக்கிய“சுந்தர பாண்டியன்”, சசி குமாருக்கு ஜோடியாக நடித்திருந்தார் லட்சுமி மேனன்.  மேலும் இந்த படத்திற்காக சிறந்த அறிமுக நடிகைக்கான விருதும் அவருக்கு கிடைத்தது. இந்த படத்தை தொடர்ந்து, இவர் நடிப்பில் வெளியான  ‘கும்கி’, ‘பாண்டியநாடு’,  ‘ஜிகர்தண்டா’, ‘மஞ்சப்பை’ போன்ற படங்கள் தொடர்ந்து வெற்றி பெற்றதால், வளர்ந்து வரும் நடிகைகள் பட்டியலில் இடம்பிடித்தார்.  ஏற்றம் கண்டு வந்து, லட்சுமி மேனனுக்கு புதுமுக நடிகைகளின் வரவால், பட வாய்ப்புகள் குறைய துவங்கியது. 

குறிப்பாக 'வேதாளம்' படத்தில் அஜித்துக்கு தங்கையாக நடித்தபின், தொடர்ந்து அதே போன்ற பட வாய்ப்புகள் வந்ததால், படிப்பை காரணம் காட்டி தமிழ் திரையுலகை விட்டு விலகினார். இவர் நடிப்பில் கடைசியாக, இயக்குனர் ரத்தின சிவா இயக்கிய ‘ரெக்க’ படம் வெளியானது. இந்த படத்தில், விஜய்சேதுபதிக்கு ஜோடியாக லட்சுமி மேனன் நடித்திருந்தார்.

இந்தப் படத்தை அடுத்து இவர் பிரபுதேவாவுக்கு ஜோடியாக நடித்த ‘ஜில் ஜங் ஜக்’ திரைப்படம் ஒரு சில காரணத்தால் இன்னும் வெளியாகாமல் உள்ளது. இதைத்தொடர்ந்து,  கிட்டத்தட்ட 4 வருடத்திற்கு பின் மீண்டும் பிரபல இயக்குனர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் ஒரு படத்தில், நடிகர் கௌதம் கார்த்திக்கு ஜோடியாக நடிக்க தயாரானார் லட்சுமி மேனன்.நடிகை லட்சுமிமேனன் இயக்குனர் முத்தையா இயக்கத்தில் ஏற்கனவே குட்டிப்புலி, கொம்பன், ஆகிய படத்தில் நடித்துள்ளார்.

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!

இந்த படத்தை தொடர்ந்து, நடிகர் விக்ரம் பிரபு நடிக்கும் டபுள் ஹீரோயின் கான்செப்ட் படத்திலும் லட்சுமி மேனன் நடிக்கிறார். இந்த படங்கள், தற்போது கொரோனா பிரச்சனை முடிவடைந்த பின்னர் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது ரீ-என்ட்ரிக்காக வெறித்தனமாக தயாராகி வரும் லட்சுமி மேனன், சோசியல் மீடியாவில் செம்ம ஆக்டிவாக வலம் வருகிறார். அதேபோல் பாவாடை, தாவணி, புடவையில் மட்டுமே திரையில் காட்சி தந்த லட்சுமி மேனன், சமீபத்தில் மார்டன் உடையில் மனதை மயங்கும் விதமாக போட்டோ ஷூட் நடத்தினர். அதுமட்டுமின்றி பரத நாட்டியம் ஆடும் வீடியோக்களையும் பகிர்ந்து வருகிறார். தற்போது, லட்சுமி மேனன் அழகான மஞ்சள் நிற புடவையில், குச்சிப்புடி நடனம் ஆடி, அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த அசத்தலான வீடியோ இணையத்தில் மிகவும் வைரலாகி வருகிறது.
 

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

click me!

Recommended Stories

மீண்டும் அதே பாசம், அதே கூட்டணி; அதிரடியாக இணையும் அஜித் - சிவா? விஸ்வாசம் 2 அப்டேட்!
ஸ்டார் அந்தஸ்துக்காகக் காத்திருந்து வெற்றிக் கனியைப் பறிக்க முடியாமல் தவிக்கும் ஹீரோயின்!