சைலண்ட் திரில்லர் படத்தை சத்தமில்லாமல் வாங்கிய அமேசான் பிரைம்... அடுத்த மாதம் ரிலீஸ்...!

By Kanimozhi PannerselvamFirst Published Sep 11, 2020, 8:58 PM IST
Highlights

சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம், ரிலீஸுக்கு முன்னதாகவே ரூ. 100 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

கொரோனா பிரச்சனை காரணமாக, மார்ச் மற்றும் ஏப்ரல் மாதத்தில் வெளியாக வேண்டிய படங்களே இன்னும் வெளியிடப்படாமல் உள்ளதால்,  இந்த பிரச்சனை அனைத்தும் முடிந்த பின், ரிலீசுக்கு தயாராக உள்ள திரைப்படங்களை,  திரையரங்குகளில் வெளியிடுவது எந்த அளவிற்கு சாத்தியம் என்பது தெரியாத சூழல் உருவாகி உள்ளது. தற்போது மத்திய, மாநில அரசுகள் ஷூட்டிங்கிற்கு அனுமதி கொடுத்தாலும், தியேட்டர்களை திறக்க அனுமதி கொடுக்கவில்லை.

இதனால் ஓடிடி தளங்கள் கூடுமான வரை புதுபடங்களை கொக்கி போட்டு தன் வசம் இழுத்து வருகின்றனர்.  இதற்கு முன்னதாக ஜோதிகா நடித்துள்ள, “பொன்மகள் வந்தாள்” திரைப்படம் ஓடிடி பிளாட்பார்மில் ரிலீஸானது. தியேட்டர் உரிமையாளர்களின் கடும் எதிர்ப்பிற்கு இடையே வெளியான, அமேசான் பிரைமில் வெளியான பொன்மகள் வந்தாள் திரைப்படம் விமர்சன ரீதியாக வெற்றி பெற்றது. சூர்யாவின்  2டி எண்டெர்டெயின்மெண்ட்  நிறுவனம்  ரூ.4.5 கோடி பட்ஜெட்டில் தயாரித்த,  இந்த திரைப்படத்தை அமேசான் நிறுவனம் 9 கோடி ரூபாய்க்கு வாங்கியதாகவும் கூறப்பட்டது. 

இதனைத் தொடர்ந்து, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் உருவான “பெண்குயின்” திரைப்படமும் அமேசான் பிரைமில் நேரடியாக கடந்த ஜூன் 19ம் தேதி வெளியானது. இந்த படம் ஓடிடி-யில் பெரிதாக வெற்றி பெற்றதாக தெரியவில்லை. இதையடுத்து சூர்யாவின் சூரரைப்போற்று திரைப்படம் அக்டோபர் 30ம் தேதி அமேசான் பிரைமில் வெளியாக உள்ளது. தமிழ் சினிமாவில் ‘இறுதிச்சுற்று’ திரைப்படம் மூலம் கவனம் ஈர்த்த சுதா கொங்கரா இயக்கத்தில், சூர்யா நடித்துள்ள திரைப்படம் “சூரரைப் போற்று”. சூர்யாவின் 2டி எண்டர்டெயின்மெண்ட், சிக்யா நிறுவனம் இணைந்து தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். 

 சுமார் 60 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட சூரரைப் போற்று திரைப்படம்,  ரிலீஸுக்கு முன்னதாகவே ரூ. 100 கோடிக்கு பிசினஸ் செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தயாரிப்பு தொகையான ரூ.60 கோடியை கொடுத்து அமேசான் பிரைம் ஏற்கனவே படத்தை வாங்கிக் கொண்டதாக கூறப்படும் நிலையில், சாட்டிலைட் உரிமை ரூ.20 கோடி, ஹிந்தி டப்பிங் ரைட்ஸ் ரூ.20 கோடி என மொத்தம் 100 கோடி ரூபாயை அள்ளியுள்ளதாக கூறப்படுகிறது.

 

இதையும் படிங்க: ஹீரோயின் வாய்ப்பிற்காக இப்படியா?... அடுத்தகட்டத்திற்கு காய் நகர்த்திய அனிகாவின் அதிரடி போட்டோஸ்...!

இந்த வரிசையில் தற்போது அனுஷ்கா, அஞ்சலி, மாதவன் உள்ளிட்டோர் நடித்த “நிசப்தம்“ படமும் ஓடிடி தளத்தில் வெளியாக உள்ளது.  மிகுந்த பொருட்செலவில் தமிழ், தெலுங்கு, இந்தி, மலையாளம், ஆங்கிலம் ஆகிய 5 மொழிகளில் இந்த படம் உருவாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இந்த படத்தின் வியாபார உரிமையைக் கைப்பற்ற அமேசான் பிரைம் நிறுவனம் முயன்று வந்தது. இந்நிலையில் படம் பெரிய தொகைக்கு கைமாறி இருப்பதாகவும், அக்டோபர் மாதம் பெரிய அளவில் விளம்பரம் செய்து ஓடிடி-யில் ரிலீஸ் செய்ய உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 

click me!