
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், ஒரு இடத்தில் கூட வெற்றி பெறாமல் தோல்வியை தழுவிய மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து அடுத்தடுத்து, அந்த கட்சி வேட்பாளர்கள் விலகி வருவதால்... பிக்பாஸ் நிகழ்ச்சி போல் ஆகிவிட்டது மக்கள் நீதி மய்யம் கட்சி என்று பங்கமாக கலாய்த்துள்ளார் நடிகை கஸ்தூரி.
நடந்து முடிந்த சட்டப்பேரவை தேர்தலில் நடிகர் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி ஒரு இடத்தில் கூட வெற்றிப்பெற முடியாமல் படுதோல்வி அடைந்தது. இதனையடுத்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து துணை தலைவர்கள் மகேந்திரன், பொன்ராஜ், பொதுச் செயலர் குமரவேல் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் திடீரென கட்சியில் இருந்து விலகினர்.
அதேபோல், யாரும் எதிர்பாராத வகையில் மக்கள் நீதி மய்யத்தின் பொது செயலாளரும், வேளச்சேரி தொகுதியின் வேட்பாளருமான சந்தோஷ் பாபு ஐஏஎஸ், அனைத்து பொறுப்புகளிலும் இருந்தும் விலகுவதாக அறிவித்தார். அவரை தொடர்ந்து, மக்கள் நீதி மய்யத்தில் இருந்து மதுரவாயல் தொகுதியில் போட்டியிட்ட பத்மப்ரியா கட்சியில் இருந்து விலகுவதாக கூறியது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஒருவர் பின் ஒருவராக மக்கள் நீதி மய்யத்தில் இருந்து அக்கட்சியை சார்ந்தவர்கள் விலகி வருவதை கலாய்க்கும் விதமாக, பதிவு ஒன்றை போட்டுள்ளார் அதில் "மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூ டியூபர் பத்மபிரியா, வேளச்சேரி தொகுதி போட்டியிட்ட சந்தோஷ் பாபு ஆகிய இருவருமே மக்கள் நீதி மய்யம் கட்சியில், தேர்தலுக்கு சில நாட்களுக்கு முன்னர்தான் சேர்ந்தனர். தற்போது இருவரும் விலகி விட்டனர். இது கிட்டத்தட்ட பிக்பாஸ் நிகழ்ச்சியின் எலிமினேஷன் போலவே. தெரிகிறது அடுத்த எலிமினேஷன் யார் என்பதை பார்ப்போம் என்று கூறியுள்ளார் உள்ளார்.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.