Ponniyin selvan : பொன்னியின் செல்வன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி அப்படத்தை மறைமுகமாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
மணிரத்னம் இயக்கியுள்ள பிரம்மாண்டமான படைப்பான பொன்னியின் செல்வன் திரைப்படம், நேற்று திரையரங்கில் ரிலீஸ் ஆனது. சரத்குமார், பிரபு, கார்த்தி, ஜெயம் ரவி, விக்ரம் பிரபு, திரிஷா, ஐஸ்வர்யா ராய் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ள இப்படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. அதுமட்டுமின்றி வசூலையும் வாரிக்குவித்து வருகிறது.
பொன்னியின் செல்வன் படத்துக்கு விமர்சன ரீதியாகவும் அமோக வரவேற்பு கிடைத்து வரும் நிலையில், நடிகை கஸ்தூரி அப்படத்தை மறைமுகமாக விமர்சித்து டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவு வைரலாகி வருகிறது. அவர் பதிவிட்டுள்ளதாவது : “ஆடம்பரமான விருந்து... ரகரக உணவு.... ஆனால் ஏனோ ருசிக்கவில்லை... ரசிக்க இயலவில்லை. ஆடம்பர இசை.... எத்தனையோ வாத்தியங்கள்... ஒன்றில் கூட தமிழில்லை. அதனால் ஒட்ட முடியவில்லை” என பதிவிட்டுள்ளார்.
இதையும் படியுங்கள்... அடேங்கப்பா.. ஒரே நாளில் இத்தனை கோடியா...! வியக்க வைக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் முதல் நாள் வசூல்
இதில் அவர் ஒரு இடத்தில் கூட பொன்னியின் செல்வன் என குறிப்பிடாவிட்டாலும், அவர் அப்படத்தை தான் விமர்சித்துள்ளார் என்பது தெளிவாக தெரிவதாக ரசிகர்கள் கமெண்ட் செய்து வருகின்றனர். பாசிடிவ் விமர்சனங்களை பெற்று வரும் பொன்னியின் செல்வன் படத்துக்கு நடிகை கஸ்தூரி நெகட்டிவ் விமர்சனத்தை பதிவிட்டுள்ளது சோசியல் மீடியாவில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
இதையும் படியுங்கள்... ‘நானே வருவேன்’னு அடம்பிடித்த தனுஷுக்கு ஆப்பு வச்ச பொன்னியின் செல்வன்! தனுஷ் படத்தின் 2ம் நாள் வசூல் இவ்ளோ தான்
ஆடம்பரமான விருந்து ...ரகரக உணவு .... ஆனால் ஏனோ ருசிக்கவில்லை... ரசிக்க இயலவில்லை.
ஆடம்பர இசை .... எத்தனையோ வாத்தியங்கள்.... ஒன்றில் கூட தமிழில்லை.
அதனால் ஒட்ட முடியவில்லை.