வாக்கிங் போன தந்தையை காணவில்லை பதறிப் போன கூல் சுரேஷ்

Published : Sep 30, 2022, 09:44 PM ISTUpdated : Sep 30, 2022, 10:13 PM IST
வாக்கிங் போன தந்தையை காணவில்லை பதறிப் போன கூல் சுரேஷ்

சுருக்கம்

தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

தமிழ் திரையுலகில் நகைச்சுவை வேடத்தில் நடித்து பிரபலமானவர் கூல் சுரேஷ். இவர் சாக்லேட், ஸ்,ரீ காக்க காக்க, அலை, ஆயுத எழுத்து, குசேலன், படிக்காதவன், கந்தகோட்டை, சிங்கம்புலி, காதல் பிசாசு, வெள்ளைக்கார துரை,  கிச்சு கிச்சு, மைடியர் லிசாஉள்ளிட்ட  பல படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். சிம்புவின் தீவிர ரசிகரான இவர் வெந்து தணிந்தது காடு படம் அறிவிப்பு வெளியானது முதலில் படத்திற்காக குரல் கொடுத்து வருகிறார். தான் எந்த பேட்டி அளித்தாலும் வெந்து தணிந்தது காடு என்றே துவங்குகிறார் சுரேஷ்.

சமீப காலமாக பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த கூல் சுரேஷ் படங்களை பார்த்து விமரசங்களை கூறி வந்தார். இதன் மூலம் சோசியல் மீடியாவில் மிகவும் பிரபலமாகி விட்டார். படங்களில் இவருக்கு கிடைத்த புகழை விட சோசியல் மீடியா தான் அதிக பிரபலத்தைகொடுத்தது.. சமீபத்தில் வெந்து தணிந்தது காடு படம் வெளியான பிறகு இவர் குறித்த ஏகபோக விமர்சனங்கள் எழுந்தன.. இதனால் கண்ணீர் மல்க பேட்டி ஒன்றையும் வெளியிட்டு இருந்தார்.  தான் சிம்புவின் உயிர் ரசிகர் என குறிப்பிட்டு இருந்தார்.

பின்னர் வெந்து தணிந்தது காடு படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கூல் சுரேஷை நேரில் சந்தித்து அவருக்கு ஐபோன் ஒன்றையும் பரிசாக அளித்ததோடு அவரது பிள்ளையின் படிப்பு செலவை ஏற்றுக் கொள்வதாகவும் கூறியிருந்தார் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ். இந்நிலையில்  புதிய பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார் கூல் சுரேஷ் அதில் தனது தந்தை காலையில் வாக்கிங் சென்றதாகவும் இதுவரை திரும்பவில்லை. தனது தந்தையை காணவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். தனது தந்தையின் புகைப்படத்தை பதிவிட்டு இவரை எங்கேயும் கண்டால் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுங்கள் என குறிப்பிட்டுள்ளார் சுரேஷ். இந்த பதிவு தற்போது பலராலும் பகிரப்பட்டு வருகிறது.

மேலும் செய்திகளுக்கு...வெயில் துவங்கி யானை வரை.. தேசிய விருது நாயகன் ஜிவி பிரகாஷின் இசை பயணம்

PREV

தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.

Read more Articles on
click me!

Recommended Stories

2025ல் சாங்க்ஸில் பட்டைய கிளப்பிய டாப் 5 பாடல்கள்; ஓ இந்த பாடல் தான் டாப்பா?
தங்கமயிலின் 80 சவரன் நகையில் 8 சவரன் மட்டும் தங்கம் : கதிரிடம் உண்மையை வெளிப்படுத்திய ராஜீ!