
தென்னிந்திய சினிமாவில், சாதனையாளர்களாக அடையாளம் காணப்படும் திரை பிரபலங்களுக்கு ஆண்டு தோறும், மிக உயரிய விருதாக கருதப்படும் தாதா சாகேப் பால்கே விருது வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 1969ம் ஆண்டு முதல் முதல் வழங்கப்படும் இந்த விருதை, தென்னிந்திய திரையுலகை சேர்ந்த அமிதாப் பச்சன், சத்யஜித் ரே, ராஜ் கபூர், ரஜினிகாந்த், சிவாஜி கணேசன், கே.பாலச்சந்தர் போன்ற பலர் பெற்றுள்ளனர்.
இந்நிலையில், சமீபத்தில் 52வது தாதா சாகேப் பால்கே' விருதினை மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் அறிவித்தார். அதில் இந்த ஆண்டுக்கான தாதா சாகேப் பால்கே விருது , இந்திய திரைத்துறையில், இயக்குநர், தயாரிப்பாளர், நடிகை, என பன்முக திறமையாளராக விளங்கும், மூத்த நடிகை ஆஷா பாரிக்கிற்க்கு இந்த விருது அறிவிக்கப்பட்டது.
இதை தொடர்ந்து, இன்று நடைபெற்ற 68 ஆவது தேசிய விருதுகள் வழங்கும் விழா டெல்லிலில் நடைபெற்ற நிலையில், 79 வயதான நடிகை ஆஷா பாரிக், குடியரசு தலைவர் கையால் இந்த விருதினை பெற்றுக்கொண்டார். இதுகுறித்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மாடுகளோ ஆஷா பாரிக், "தில் தேகே தேகோ", "கடி படங்", "தீஸ்ரி மன்சில்" மற்றும் "கேரவன்" போன்ற படங்கள் மூலம் மிகவும் பிரபலமானவர். மேலும் தயாரிப்பாளராகவும், இயக்குனராகவும் அறியப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.