
தென்னிந்திய திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான ஹன்சிகா மோத்வானி, 2007ம் ஆண்டு அல்லு அர்ஜுன் உடன் நடித்த "தேசமுருடு" என்ற தெலுங்கு திரைப்படம் மூலம் திரையலகிற்கு அறிமுகமானார். பிரபல இயக்குநர் பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைச்சது. அதற்கு பிறகு தமிழ் திரையுலகிற்கு வந்த ஹன்சிகா, 'ஒரு கல் ஒரு கண்ணாடி', 'சிங்கம் '2, 'மான் கராத்தே', 'பிரியாணி' உள்ளிட்ட பல படங்களில் முன்னணி ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து கலக்கினார்.
இதையும் படிங்க: அரைகுறை உடையில்... நடுரோட்டில் நின்று முத்தம்... அமலா பாலின் அடுத்த அட்ராசிட்டி...!
ஹன்சிகாவின் கொழு, கொழு அழகை பார்த்து அவரை குட்டி குஷ்பூ என ரசிகர்கள் செல்லமாக அழைக்கின்றனர். தற்போது தனது முன்னாள் காதலரான சிம்புவுடன் "மகா" படத்தில் நடித்து வரும் ஹன்சிகாவின் கைவசம் பெரிதாக பட வாய்ப்புகள் ஏதும் இல்லை. உடனே அதிரடி கவர்ச்சி பாதைக்கு மாறிய ஹன்சிகா ஹாட் போட்டோ ஷூட்களை நடத்தி, அந்த போட்டோஸை சோசியல் மீடியாவில் வைரலாக வலம் வர வைத்தார்.
இதையும் படிங்க: அஜித், சிம்புவை தொடர்ந்து ஜோதிகாவிற்கும் சிக்கல்... விடாமல் துரத்தும் கொரோனா வைரஸ்...!
தனது கொழுக்கு மொழுக்கு உடலை குறைத்து ஒல்லி, பெல்லி லுக்கிற்கு மாறியுள்ள ஹன்சிகா. தற்போது மாலத்தீவில் ஜாலியாக விடுமுறையை கொண்டாடி வருகிறார். அங்குள்ள கடற்கரை ஒன்றில் மஞ்சள் நிற பிகினி அணிந்திருக்கும் ஹன்சிகா மோத்வானி உடலை வில்லாக வளைத்து செம்ம மாஸான போஸ் ஒன்றை கொடுத்துள்ளார்.
இதையும் படிங்க: அப்பாவுடன் இப்படியா?... ஏடாகூடமான போட்டோ போட்டு நெட்டிசன்களிடம் வாங்கி கட்டிக்கொள்ளும் பிரபல நடிகை...!
அந்த புகைப்படத்தை பிரபல நடிகைகளான சமந்தா, காஜல் அகர்வால், ஸ்ரேயா உள்ளிட்டோர் லைக் செய்துள்ளனர். உடல் எடையை குறைத்த பிறகு இப்படி ஒரு சாகசத்தில் இறங்கியுள்ள ஹன்சிகாவிற்கு ரசிகர்களின் பாராட்டு குவிந்து வருகிறது.
தமிழ் சினிமா (Tamil Cinema News), டிவி நிகழ்ச்சிகள் (Tamil TV Shows), செலிபிரிட்டி செய்திகள் மற்றும் சமீபத்திய அப்டேட்களுக்காக ஏஷ்யாநெட் தமிழ் நியூஸின் பொழுதுபோக்கு பிரிவை ஆராயுங்கள். சினிமா விமர்சனங்கள் (Tamil Movies Review), நட்சத்திரங்களின் நேர்காணல்கள், தொடர்களில் நடக்கும் ட்ராமா மற்றும் பொழுதுபோக்கு உலகின் டிரெண்ட்ஸ்பாட்டிங்குடன் எப்போதும் புதுப்பித்த நிலையில் இருங்கள். திரையரங்குப் பின்னணி கதைகள்,டிரெய்லர் வெளியீடுகள்மற்றும் ரெட் கார்பெட் தருணங்களை அறிந்து கொள்ளுங்கள்.