ஸ்கேட்டிங் செய்து விழுந்து வாரிய ஜெனிலியா! கையில் கட்டோடு அவரே வெளியிட்ட வீடியோ..!

By manimegalai aFirst Published Mar 10, 2021, 6:40 PM IST
Highlights

நடிகை ஜெனிலியா, ஸ்கேட்டிங் செய்ய ஆசைப்பட்டு நிலைதடுமாறி கீழே  விழுந்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.
 

நடிகை ஜெனிலியா, ஸ்கேட்டிங் செய்ய ஆசைப்பட்டு நிலைதடுமாறி கீழே  விழுந்ததில் கை எலும்பு முறிவு ஏற்பட்டதை வீடியோ வெளியிட்டு தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்: பாஜக-வில் இணைந்த வேகத்தில்... நட்சத்திர பேச்சாளர் பட்டியலில் இடம் பிடித்த பிரபல நடிகர்!
 

பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில், நடிகர் சித்தார்த்துக்கு ஜோடியாக 'பாய்ஸ்' படத்தில் அறிமுகமானவர் நடிகை ஜெனிலியா. திருமணம் ஆகி குழந்தைகள் பெற்ற பின் திரையுலகில் இருந்து சில வருடங்கள் ஒதுங்கியே இருந்த நிலையில், மீண்டும் ஹிந்தியில் ரீ- என்ட்ரி கொடுத்து கணவருடன் ஒரு பாடலுக்கு ஆட்டம் போட்டார்.

கோலிவுட் திரையுலகில், தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்கள் மனதில் நிலைத்து நின்ற ஒரு சில நடிகைகளில் ஜெனிலியாவும் ஒருவர்.... ஜெனிலியா நடித்த சச்சின், சந்தோஷ் சுப்பிரமணியம், போன்ற படங்களில் துரு துரு நடிப்பை வெளிப்படுத்தி, தமிழ் ரசிகர்களை கவர்ந்தவர். தமிழ் மற்றும் இன்றி, தெலுங்கு, கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளிலும் நடித்தார். 

மேலும் செய்திகள்: நடிகை ஷகிலாவின் மகள் இவரா? 'குக் வித் கோமாளி' அஷ்வின் பற்றி உணர்வுபூர்வமாக பதிவிட்ட மில்லா!
 

இந்நிலையில் இவர் Tere Naal Love Ho Gaya என்கிற படத்தில் நடித்த போது, நடிகர் ரித்தீஷ் தேஷ்முக்கிற்கும் ஜெனிலியாவிற்கும் காதல் மலர்ந்தது. இவர்களுடைய காதல் திருமணத்திலும் முடிந்தது. கடந்த 2012 ஆண்டு திருமணம் செய்து கொண்ட இந்த தம்பதிகளுக்கு, இரண்டு குழந்தைகள் உள்ளனர். திருமணத்திற்கு பின், ஒப்புக்கொண்ட படங்களை மட்டுமே நடித்து முடித்து கொடுத்தார். பின் குழந்தைகள் பெற்று கொண்டு, குழந்தைகளை வளர்ப்பதில் அதிக கவனம் செலுத்தி வருகிறார்.

மேலும் செய்திகள்: நம்ம வைகை புயல் வடிவேலுவா இது? கழுத்தில் டை... ஹேண்ட்சம் லுக்கில் யாரும் பார்த்திடாத அரிய புகைப்படம்!
 

நடிக்கும் போது எப்படி துறுதுறுவென இருந்தாரோ... அதே போல் இப்போதும் சற்றும் மாறாமல் உள்ளார். ஸ்கேட்டிங் கற்க வேண்டும் என்கிற ஆசையில், குழந்தைகளுடன் சேர்ந்து இவரும் பயிற்சி எடுத்து வந்துள்ளார். ஒரு நாள் தன்னுடைய சாகசத்தை வீடியோ எடுத்து வெளியிட நினைத்த ஜெனிலியா ஸ்கேட்டிங் செய்த போது, நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளார். அபோது அவரது கையில் பலமாக அடிபட்டு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்த வீடியோவை ஜெனிலியா வெளியிட்டுள்ளார்... அந்த வீடியோ இதோ... 


 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Genelia Deshmukh (@geneliad)

 

click me!